BSNL வழங்கும் மலிவான பிராட்பேண்ட் சேவைக்கு பெருகும் டிமாண்ட் ... கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்..!!
வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தி: ஜூலை மாத தொடக்கத்தில், தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள், போஸ்ஸ்பேட் மற்றும் ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தியதால், பல வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது.
ஜியோ, ஏர்டெல், வோடபோன் போன்ற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் போஸ்ஸ்பேட் மற்றும் ப்ரீபெய்ட் கட்டண உயர்வினால் ஏற்படும் செலவை தவிர்க்க, வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் ஐ நோக்கி படையெடுக்க தொடங்கினர்.
பிஎஸ்என்எல் 4ஜி சேவை: பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களில், பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை தொடங்கி விட்டதால், நெட்வொர்க் தொடர்பான பிரச்சனைகள் இருக்காது என்று வாடிக்கையாளர்கள் மத்தியில் எண்ணம் ஏற்பட்டுள்ளது.
தொலைதூரப் பகுதிகளில் இருக்கும் கிராமங்கள் மற்றும் மலை பிரதேசங்களுக்கும், பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் நெட்வொர்க்கை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசும், நிதி ஒதுக்கி திட்டம் தீட்டி வருகிறது.
ஜியோ ஏர்டெல் வோடபோன் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், போஸ்ட் பெய்டு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு இருக்கும் வரவேற்பை போலவே, பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் சேவைக்கும் வரவேற்பு அதிகரித்துள்ளது.
பிஎஸ்என்எல் 249 ரூபாய்க்கு, அடிப்படை பிராட்பேண்ட் திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தில் 25 mbps டேட்டா கிடைக்கும். இதைப்போல இரண்டு mbps போஸ்ட் டேட் ஆப் சலுகையும் கிடைக்கும். இதில் லேண்ட்லைன் மூலமாக லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்களையும் செய்து கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் ரூ.329 பிராட்பேண்ட் திட்டத்தில் (Brodband Plan) 25 mbps வேகத்தில் டேட்டா சலுகை கிடைக்கும். வாடிக்கையாளர்கள் அதிபட்சமாக 1000 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். அதற்கு பிறகு 4 mbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சேவை கிடைக்கும்