BSNL-ன் அதிரடியான புதிய recharge plan: அதிர்ச்சியில் Airtel, Jio, Vi
)
1: பாரத் ஃபைபர் ரூ.449 திட்டம்: குறிப்பிட்டபடி, BSNL இன் மலிவான பிராட்பேண்ட் திட்டம் ரூ.449க்கு கிடைக்கிறது. இது 30 Mbps வேகத்துடன் 3.3 TB டேட்டாவையும், வரம்பற்ற அழைப்போடு லேண்ட்லைன் இணைப்பு போன்ற பிற நன்மைகளையும் வழங்குகிறது.
ரூ.449 திட்டத்துடன் கிட்டத்தட்ட ஒவ்வொரு அம்சத்தையும் மிகவும் மலிவான விலைக்கு வழங்குவதன் மூலம் அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த தொலைத் தொடர்பு நிறுவனம் தனது சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
)
2: பாரத் ஃபைபர் ரூ.799 திட்டம்: BSNL பாரத் ஃபைபரின் இரண்டாவது திட்டத்தின் விலை ரூ.799 ஆகும். இந்த திட்டத்தின் வழியாக பிஎஸ்என்எல் 100 Mbps வேகத்தையும், 3.3 TB டேட்டா மற்றும் இலவச லேண்ட்லைன் இணைப்பு மற்றும் வரம்பற்ற அழைப்பு போன்ற சலுகைகளை கிடைக்கும்.
)
3: பாரத் ஃபைபர் ரூ.999 திட்டம்: BSNL ரூ.999 திட்டமானது 200 Mbps வேகத்தின் கீழ் 3.3 TB டேட்டாவை வழங்கும். இதில் நீங்கள் இலவச லேண்ட்லைன் இணைப் பெறலாம் பு மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை தவிர, டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கான இலவச சந்தாவையும் பெறலாம்.
4: பாரத் ஃபைபர் ரூ.1,499 திட்டம்: ரூ.1,499 திட்டத்தின் கீழ் 300 Mbps வேகத்தை வழங்குவதால், அதிவேக பதிவிறக்கம் பயனர்களுக்கு கிடைக்கும். ரூ.1,499 திட்டமானது மேற்குறிப்பிட்ட ரூ.999 திட்டத்தின் அதே நன்மைகளை வழங்கும் ஆனால் இந்த திட்டம் அதன் பயனர்களுக்கு 4 TB அளவிலான டேட்டாவை வழங்கும்.