BSNL வழங்கும் அசத்தல் பிராட்பேண்ட் ஆஃபர்... ராக்கெட் வேகத்தில் 3300 GB டேட்டா...!

Thu, 08 Aug 2024-3:30 pm,

பிஎஸ்என்எல் 4ஜி சேவை: BSNL நிறுவனம் 4ஜி மற்றும் பிராட்பேண்ட் சேவைகளை  மேம்படுத்த துரித கதியில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  உள்நாட்டு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட உபகரணங்களைப் பயன்படுத்தி வரும் பிஎஸ்என்எல், நாட்டில் சுமார் 15000+ 4ஜி டவர்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளதாக சமீபத்தில் குறிப்பிட்டது.

பிஎஸ்என்எல் மழைக்கால சலுகை: நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் இணைய பிராட்பேண்ட் பயனர்களுக்கு BSNL Monsoon Bonanza என்னும் பருவ கால சலுகையை அறிவித்துள்ளது. இதில் பயனர்களுக்கு மலிவான விலையில் 3300GB அதிவேக டேட்டா திட்டம் வழங்கப்படுகிறது. 

BSNL பிராட்பேண்ட் சேவை: பிஎஸ்என்எல் அறிவித்துள்ள சலுகையின் கீழ் தனது பிராட்பேண்ட் திட்டத்தின் கட்டணத்தை ரூ.100 குறைத்துள்ளது. பயனர்கள் இப்போது ரூ.499 பிராட்பேண்ட் திட்டத்திற்கு ரூ.399 செலுத்தினால் போதும்.

BSNL பிராட்பேண்ட் திட்டம்: BSNL வழங்கும் இந்த பிராட்பேண்ட் திட்டத்தில், பயனர்களுக்கு மொத்தம் 3,300GB டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தில் வரம்பற்ற வாய்ஸ் கால் வசதியும்கிடைக்கிறது. 

அதிவேக பிராட்பேண்ட் சேவை: BSNL வழங்கும் இந்த பிராட்பேண்ட் திட்டத்தில், பயனர்களுக்கு 60Mbps வேகத்தில் இணைய சேவை வழங்கப்படும். டேட்டா வரம்பு கடந்த பிறகு, இணைய வேகம் 4Mbps ஆக குறையும்.

புதிய வாடிக்கையாளர்களுக்கு சலுகை திட்டம்: BSNL வழங்கும் இந்த சலுகை புதிய பிராட்பேண்ட் பயனர்களுக்கானது. பாரத் ஃபைபர் பிராட்பேண்டின் புதிய சேவையைப் பெறும் பயனர்கள், முதல் 3 மாதத்திற்கு வெறும் 399 ரூபாய் செலுத்தினால் போதும். இதன் பிறகு திட்டத்தின் கட்டணம் ரூ.499 ஆக இருக்கும். 

சலுகையை பெறும் வழிமுறை: பயனர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவும், பிஎஸ்என்எல் செல்ப்கேர் ஆப் மற்றும் வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் மூலமாகவும் இந்தச் சலுகையைப் பெறலாம்.

BSNL-ன் புதிய ஹெல்ப்லைன் சேவை: பிஎஸ்என்எல் சமீபத்தில் வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் சேவையையும் தொடங்கியுள்ளது. இதில், பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப்பிற்குச் சென்று 1800 4444 என்ற ஹெல்ப்லைன் எண்ணுக்கு ஹாய் என்று எழுதி மெசேஜ் அனுப்பி பல சேவைகளை பெறலாம். 

ஹெல்ப்லைன் சேவை மூலம் கிடைக்கும் வசதிகள்: பயனர்கள் BSNLவழங்கும் புதிய திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளுதல், பில் செலுத்துதல், திட்டத்தை மேம்படுத்துதல் போன்ற வசதிகளைப் பெறலாம். வாட்ஸ் மூலம் கிடைக்கும் ஆப்ஷன்களை பயன்படுத்தி தேவையான சேவைகளை பெறலாம்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link