Budget 2024: புதிய வரி முறையில் வரி செலுத்துவோருக்கு உள்ள முக்கிய எதிர்பார்ப்புகள்
2024 நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் (FY24) இன்னும் சில வாரங்களில் தாக்கல் செய்யப்படும். இது குறித்து பல துறைகளில் பல எதிர்பார்ப்புகள் உள்ளன. நாடு முழுவதும் உள்ள வரி செலுத்துவோர் வரி நிவாரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
நடுத்தரக் குடும்பங்களின் நுகர்வை அதிகரிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என கூறப்படுகின்றது. இது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு மிக முக்கியமான ஒன்றாகும். ஆகையால் இதில் அதிக கவனம் செலுத்துவதாக கூறப்படுகின்றது. இதன் மூலம் ஏற்கனவே வலுவாக இருக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை மேலும் மேம்படுத்த முடியும்.
பழைய வரி முறையிலிருந்து (Old Tax Regime) வரி செலுத்துவோரை புதிய வரி முறைக்கு இழுக்க புதிய வரி விதிப்பு முறையை கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் அறிவிக்கலாம் என கூறப்படுகின்றது. இதற்கான பல நடவடிக்கைகள் எடுக்கபப்டும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
புதிய வரி விதிப்பு முறையின் கீழ் அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வரி செலுத்துவோர் ஆசைப்படுகின்றனர். இவை அனைத்தையும் அரசாங்கம் எடுக்க முடியாது என்றாலும், வரவிருக்கும் பட்ஜெட்டில் அரசாங்கம் செயல்படுத்தப்படக்கூடிய சிலவற்றை இங்கே காணலாம்.
சம்பளம் பெறும் நபர்களுக்கான நிலையான விலக்கு, அதாவது ஸ்டாண்டர்ட் டிடக்ஷனுக்கான தொகையை அதிகரிக்கவும், தள்ளுபடி தொகையில் சில அதிகரிப்புகளை செய்யவும் நீண்டகால கோரிக்கை உள்ளது. இதற்கான வரி செலுத்துவோர் பல நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
தற்போதைய புதிய வரி முறையில் விலக்குகள் அனுமதிக்கவில்லை என்றாலும், பழைய வரி முறையில் 80C பிரிவின் கீழ் அனுமதிக்கப்பட்ட சில முதலீட்டு அடிப்படையிலான விலக்குகளை அறிமுகப்படுத்துவது புதிய வரி முறையை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியத்திற்கான திட்டமிடல், குழந்தைகளின் கல்வி மற்றும் நிதி வளர்ச்சி போன்ற கூடுதல் நன்மைகளிலிருந்து வரி செலுத்துவோர் பயனடைவார்கள். இது அவர்களின் நீண்ட கால நிதி ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
வணிக மற்றும் தொழில்முறை வரி செலுத்துவோர் வரி விதிப்புகளுக்கு இடையில் மாறுவதற்கான நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும் வசதிகளை அனுமதிகக் வேண்டும் என நிபுணர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
வரவிருக்கும் பட்ஜெட்டில், வரி செலுத்துவோர் சில நேர்மறையான வரி நிவாரண நடவடிக்கைகளை எதிர்பார்க்கிறார்கள். வரி அடுக்குகளில் மாற்றம், அடிப்படை விலக்கு வரம்புகளில் அதிகரிப்பு ஆகியவற்றின் மூலம் சில வரி நிவாரணங்களை வழங்குவதற்கான திட்டங்களை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.