சனிபகவான்: அஸ்தமன நிலையிலும் அள்ளிக்கொடுப்பார் சனி, இந்த ராசிகளுக்கு பம்பர் பலன்கள்!!

Sat, 11 Feb 2023-12:41 pm,

சனி பகவானின் அஸ்தமனம் அனைத்து ராசிகளிலும் பல வித தாக்கங்களை ஏற்படுத்தும். குறிப்பாக, சனி அஸ்தமிப்பது 3 ராசிகளுக்கு குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வரும். இந்த நேரம் இவர்களுக்கு மிக நல்ல பலன்களை அள்ளித் தரும். 

சனி பகவானின் பெயர்ச்சி மற்றும் சனியின் அஸ்தமனம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கும். சனி இவர்களுக்கு தொழிலில் அனுகூலமான பலன்களை தருவார். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அமையும். வருமானம் அதிகரிக்கும்.

வருமானத்தில் உயர்வு இருக்கும். உங்கள் தொழிலில் நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வெற்றி இப்போது உங்களைத் தேடி வரும். 

கன்னி ராசிக்காரர்களுக்கு அஸ்தமன சனி மிகுந்த பலன்களைத் தருவார். எதிரிகள் அடிபடுவார்கள். நோய்கள் விலகும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். தைரியமும் வலிமையும் அதிகரிக்கும்.

மகர ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்திலும் லாபம் உண்டாகும். பணிகள் வேகமாக நடைபெறும்.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link