குரு பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு குபேர யோகம்... செல்வத்திற்கு குறைவிருக்காது!
குரு பகவான் மேம் மாதம் 1ம் தேதி தனது ராசியை மாற்றுகிறார். மேஷ ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்குள் நுழையும் குரு பகவானால், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் செல்வ வலம் பெருகும். இந்த ராசிக்காரர்களின் குபேர யோகத்தை பெறுவார்கள்.
மேஷ ராசியினருக்கு குரு பெயர்ச்சி, பண வரவு சிறப்பாக இருக்கும். உங்கள் தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். நீதிமன்ற வழக்குகளை சந்திப்பவர்கள் சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம். வேலை, தொழிலில் வெற்றிகளை குவிக்கலாம். அதிர்ஷ்டமும் சாதகமாக இருக்கும்.
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி ராஜயோக பலன்களைக் கொடுக்கும். வேலையில், அபரிமிதமான முன்னேற்றத்தையும் வெற்றியையும் தரும். பதவி உயர்வு அல்லது புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவது சாதகமாக இருக்கும். எதிர்பாராத பண ஆதாயங்களைப் பெறலாம்.
மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சுப பலன்களை கொடுக்கும். வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் வெற்றியை அனுபவிப்பார்கள். பொருளாதார ஆதாயங்களும், பொருள் வசதிகளும் சிறப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில் முதலீடுகளில் நல்ல இலாபம் கிடைக்கும்.
சிம்ம ராசிக்காரர்கள் குருவின் சஞ்சாரத்தால் சாதகமான பலன்களைப் பெறலாம். வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு பெறலாம். சக ஊழியர்கள் திறம்பட ஒத்துழைக்கலாம். சமூகத்தில் மரியாதை கூடும். திருமணமானவர்கள் தங்கள் துணையுடன் சுற்றுலா பயணம் செய்ய திட்டமிட இது ஒரு நல்ல நேரமாகும்.
கன்னி ராசியினருக்கு குருவின் சஞ்சாரம் கல்வி மற்றும் தொழிலில் வெற்றியைத் தரும். வேலை செய்பவர்கள் பதவி உயர்வு அல்லது புதிய வேலை வாய்ப்பைபுகள் வந்து சேரும். தொழில் வல்லுநர்கள் நிதி ஆதாயங்களையும் புதிய வாய்ப்புகளையும் காணலாம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்கள் வெற்றி பெறலாம். பல வகையில் அனுகூலமான பலன்களைப் பெறலாம்.
தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியினால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். இந்தக் காலகட்டத்தில் திடீர் முன்னேற்றம் மற்றும் சாதனைகள் செய்யும் வாய்ப்புகள் உண்டு. தன்னம்பிக்கை அதிகரித்து தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் அடையலாம். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.