பம்பர் சலுகைகள், பலே தள்ளுபடி: அமேசானில் ஸ்மார்ட்போன்களின் அதிரடி சேல்

Tue, 09 Aug 2022-2:52 pm,

சாம்சங் காலக்சி எம்32: தள்ளுபடி சலுகையுடன் ரூ.15,000-க்குள் சிறந்த போனை வாங்க விரும்பினால், இந்த சாம்சங் ஃபோன் உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும். 1000 ரூபாய் தள்ளுபடி மற்றும் பல கூடுதல் சலுகைகளுடன் இந்த போனை அமேசான் சேலில் இருந்து பயனர்கள் ரூ.11,999க்கு வாங்கலாம். 6000mAh பேட்டரி உட்பட பல சிறப்பு அம்சங்கள் இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஒன்பிளஸ் நார்ட் சிஇ 2: இந்த போனின் ஆரம்ப விலை ரூ.23,999 ஆகும். எஸ்பிஐ கார்டு மூலம் இந்த போனை வாங்கினால் ரூ.1,500 தள்ளுபடி சலுகையும் வழங்கப்படுகிறது. மீடியாடெக் டைமென்சிடி 900 சிப்செட், 64எம்பி டிரிபிள் கேமரா அமைப்பு மற்றும் 65W SUPERVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ளன.

சியோமி 12 ப்ரோ: இந்த போனின் ஆரம்ப விலை ரூ.62,999 ஆகும். தற்போது அமேசான் ஃப்ரீடம் சேலில் இந்த போனுக்கு ரூ.5,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர, பயனர்கள் எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், அவர்களுக்கு ரூ.13,000 தள்ளுபடி கிடைக்கும். இந்த ஃபோனில் Qualcomm Snapdragon 8 Generation 1 சிப்செட், 120W ஹைப்பர்சார்ஜ், 50W வயர்லெஸ் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு உள்ளது. இது தவிர, இந்த போன் 50MP டிரிபிள் கேமரா மற்றும் 32MP செல்ஃபி கேமரா ஆதரவுடன் வருகிறது.

IQoo 9 5G: இந்த போனின் விலை ரூ.42,990 ஆகும். ஆனால் அமேசான் விற்பனையில் பயனர்கள் இதை ரூ.39,990க்கு வாங்கலாம். இது தவிர, எஸ்பிஐ வங்கி அட்டை மூலம் பணம் செலுத்தினால் ரூ.3,250 கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. 120Hz அமோல்ட் டிஸ்ப்ளே, Qualcomm Snapdragon 888 chipset, 12GB RAM, 120W FlashCharge ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ளன.

டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ: 10,000 ரூபாய்க்குள் ஒரு போனை தள்ளுபடியுடன் வாங்க விரும்பினால், இந்த ஃபோன் உங்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும். இந்த போனை அமேசான் சேலில் இருந்து 9,499 ரூபாய்க்கு தள்ளுபடி சலுகையுடன் வாங்கலாம். இதில் பெரிய 6.8 இன்ச் முழு HD திரை, 48MP டிரிபிள் கேமரா உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link