Business Idea: EV வாகன சார்ஜிங் ஸ்டேஷன் அமைத்தால்... லட்சங்களில் சம்பாதிக்கலாம்.!

Wed, 20 Dec 2023-8:30 am,

பெட்ரோல், டீசல் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்து வருகின்றன. அதே நேரத்தில், சிஎன்ஜியின் விலையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், செலவு மிகவும் குறைவு என்பதால், மின்சார வாகனங்கள் அதிகம் விரும்பப்பட்டு வாங்கப்படுகின்றன. 

மின்சார வாகனத்தை இயக்குவதற்கு மக்கள் அதிக பணம் செலவழிக்க வேண்டியதில்லை ஒரு கிலோமீட்டருக்கு 1 ரூபாய் என்ற அளவில் மட்டுமே செலவும் என்பதால், மக்கள் இதனை அதிகம் விரும்புகிறார்கள். எனவே, கிராமங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

மின்சார வாகன சார்ஜிங் நிலையத்தின் (EV சார்ஜிங் நிலையம்) வணிகத்தைத் தொடங்குவதன் மூலம் லட்சங்களில் சம்பாதிக்கலாம். மின்சார வாகனம் மூலம் மாசு ஏற்படாது என்பதால், அரசாங்கமும் இதை வாங்க மானியங்கள் அளித்து ஊக்குவித்து வருகிறது.

மின்சார வாகனம் சார்ஜ் செய்யும் நிலையத்தைத் தொடங்க, சாலையோரத்தில் 50 முதல் 100 சதுர மீட்டர் பரப்பளவில் காலி  இடம் உங்கள் பெயரில் இருக்க வேண்டும்.  அல்லது 10 வருட குத்தகையில் ஒரு இடத்தை பெற்றிருக்க வேண்டும். 

மின்சார வாகன சார்ஜிங் நிலையம் அமைக்க பல இடங்களில் அனுமதி பெற வேண்டியுள்ளது. வனத் துறை, தீயணைப்புத் துறை மற்றும் முனிசிபல் கார்ப்பரேஷனிடமிருந்து தடையில்லாச் சான்றிதழைப் பெற வேண்டும். சார்ஜிங் ஸ்டேஷனில் கார்களை நிறுத்துவதற்கும், அவை நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் முறையான ஏற்பாடு இருக்க வேண்டும். 

பெட்ரோல் டீசல் போல் அல்லாது, எலக்ட்ரிக் வாகனத்தை சார்ஜ் செய்ய சிறிது நேரம் எடுக்கும் என்பதால், வாடிக்கையாளர்களின் வசதியை கருத்தில் கொண்டு சார்ஜிங் ஸ்டேஷனில் சுத்தமான குடிநீர், கழிப்பறை, ஓய்வு அறை, தீயணைப்பான், காற்றோட்ட வசதி போன்ற அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும். 

EV சார்ஜிங் நிலையம் ஒன்றை நிறுவ 40 லட்சம் ரூபாய் வரை செலவாகும். அது அவரவர் அமைக்கும் எலக்ட்ரிக் ஸ்டேஷனின் சார்ஜிங் திறனை பொறுத்தது. குறைந்த திறன் கொண்ட சார்ஜிங் நிலையத்தை நிறுவ ரூ.15 லட்சம் வரை செலவாகும். நிலம் முதல் சார்ஜிங் பாயிண்ட் நிறுவுதல் வரையிலான செலவுகள் இதில் அடங்கும்.

3000 கிலோவாட் சார்ஜிங் ஸ்டேஷன் நிறுவப்பட்டால், ஒரு கிலோவாட்டிற்கு 2.5 ரூபாய் வருமானம் கிடைக்கும்.  ஒரு நாளில் 7500 ரூபாய் வரை எளிதாக சம்பாதிக்கலாம். ஒரு மாதத்தில் ரூ.2.25 லட்சம் வரை சம்பாதிக்கலாம். அனைத்து செலவுகளையும் சந்தித்த பிறகு, இங்கே எளிதாக ரூ.1.5 லட்சம் முதல் ரூ.1.75 லட்சம் வரை சம்பாதிக்கலாம். சார்ஜிங் ஸ்டேஷனின் திறனை அதிகப்படுத்தினால், இந்த வருமானம் மாதத்திற்கு ரூ.10 லட்சத்தை எட்டும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link