லட்சங்களில் வருமானத்தை அள்ளித் தரும் காளான் வளர்ப்பு!
அசைவ உணவுக்கு ஈடான சுவையுடன், சைவ உணவில் முதலிடம் வகிக்கிறது, பால் காளான். அதற்கு பின் தான் சோயா உணவு. சிப்பிக்காளான், பட்டன் காளான், பால்காளான் என காளானில் பல வகைகள் இருந்தாலும், அறை வெப்ப நிலையிலேயே அதிக நாட்கள் கெடாமல் இருப்பதோடு, இறைச்சிக்கு இணையான சுவை கொடுக்கக்கூடியது பால் காளான் என்பதால், சந்தையில் அதற்கு நல்ல டிமாண்ட் உள்ளது.
நல்ல வருமானம் கொடுப்பதால், சமீபகாலமாக விவசாய உபதொழிலாக பால்காளான் வளர்ப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பால்காளான் வளர்ப்பில் நல்ல வருமானம் ஈட்டுவது உங்கள் பொருளாதார நிலையை பெரிதும் உயர்த்தும்.
நாமும் நமது வீட்டு அறை, மாடியில் அல்லது வீட்டு அருகே உள்ள சிறிய இடத்தில் மிகவும் குறைந்த முதலீட்டில் காளான் வளர்ப்பை தொடங்க முடியும். குறைந்தபட்சமாக 6 அடி நீளம், 6 அடி அகலம் கொண்ட இடம் இருந்தால் போதும். அதனை சூரியஒளி படாத இடமாக மாற்றி கொள்ள வேண்டும். கொஞ்சம் பெரிய அளவில் செய்தால், லட்சங்களில் லாபம் ஈட்டலாம்.
காளான் வளர்ப்பில் அதிக கவனம் தேவை. அதனால்தான் இதில் போட்டி அதிகம் இல்லை. காளான் வளர்ப்புக்கு வெப்பநிலை மிக முக்கியமானது. வெப்பம் அதிகமாக இருந்தால் பயிர்கள் கருகும் அபாயம் உள்ளது. சாகுபடிக்கு ஈரப்பதம் 80-90 சதவீதம் இருக்க வேண்டும். நல்ல காளான்களை வளர்க்க, நல்ல உரம் இருப்பதும் அவசியம். சாகுபடிக்கு மிகவும் பழமையான விதைகளை பயன்படுத்த வேண்டாம், அது உற்பத்தியை பாதிக்கிறது.
பொதுவாக காளான் சாகுபடிக்கு ஏற்ற காலம் என்பது குளிர்காலம் என்றாலும், இந்த வகை சாகுபடியை நாம் எந்த காலத்திலும் மேற்கொள்ள முடியும். இந்த தொழிலில் ஈடுபடுவதன் மூலம் ஆண்டு முழுவதும் நல்ல லாபம் ஈட்டலாம். தற்போது இந்தியாவில் பல பேர் சிப்பி மற்றும் பால் காளான் உற்பத்தி செய்து நல்ல லாபம் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.