சுகர் இருந்தா சரக்கு அடிக்கலாமா கூடாதா...? உண்மை இதோ
மது அருந்தும் பழக்கம் பலருக்கு இருந்தாலும், நீரிழிவு நோயாளிகள் இந்த பழக்கத்தை வைத்திருந்தால் இது அவர்களிடன் உடல்நலனுக்கு கூடுதல் கெடுதலை விளைவிக்கும் என்கின்றனர்.
அதாவது, நீரிழிவு நோயாளிகள் எந்த விதமான சூழ்நிலையிலும் நிச்சயம் மது அருந்தவே கூடாது. ஏற்கெனவே உடல்நலன் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் காரியம் ஆகிவிடும்.
அதேபோல், அளவாக மது அருந்தினால் எந்த வித பிரச்னையும் இல்லை சுகர் நோயாளிகள் நினைப்பதும் முற்றிலும் தவறானது. அது கட்டுக்கதைதான்.
நீரிழிவு நோயாளிகள் மது அருந்தும்பட்சத்தில் அவர்களின் ரத்த சர்க்கரை அளவு சுமார் 30 மடங்கு உயரும் என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
Diabetes Care Journal எனப்படும் மருத்துவ இதழ் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியிட்ட கட்டுரையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீரிழிவு நோயாளிகளுக்கு நரம்புகள் சேதம் அடையும் ஆபத்துகள் அதிகம் இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
அவர்கள் மது அருந்தினால் அந்த ஆபத்து இன்னும் அதிகரிக்கும். சுகர் இருப்பவர்கள் மது குடித்தால் மிகவும் நுண்ணிய நரம்புகளும் பாதிக்கப்படும் அபாயம் அதிகரிக்கும்.
அப்படியிருக்க சிறிய அளவில் கூட நீரிழிவு நோயாளிகள் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.