Chamoli floods சமோலி வெள்ளத்திற்குப் பிறகு உத்தராகண்ட்டில் உருவான அற்புதமான இயற்கை ஏரி
இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை குழு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் அதிகாரிகளுடன் இயற்கை ஏரி உருவாகியுள்ள முரேண்டாவை அடைந்தது. இந்த குழு தனது அடிப்படை முகாமை ஏரிக்கு அருகில் நிறுவியுள்ளதுடன், ஹெலிபேட் அமைப்பதற்கான இடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது.
விமானக் குழுவிற்கு வழிகாட்ட உதவும் சரியான குறிப்புகள் மற்றும் பிற வசதிகளுடன் ஹெலிபேட் அமைக்கப்பட்டது
அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவு காரணமாக உருவான ஏரி, எந்த அளவிற்கு பாதுகாப்பானது, அது உடையும் ஆபத்தும் உள்ளதா?
ஏரி நீரை சீராக வெளியேற்றுவதற்கான வழிகளை இந்திய திபெத் எல்லை காவல் படை ITBP குழு ஏற்படுத்தி வருகிற்து
பிப்ரவரி 7 ஆம் தேதி பனி பனிச்சரிவால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் தவுலி கங்கை நதியில் தபோவனில் 520 மெகாவாட் திறன் கொண்ட NTPC நீர் மின் திட்டத்தை முழுமையாக அடித்து சென்றது.