சந்திரன் - குரு இணைவு 2025: உருவாகும் கஜகேசரி ராஜயோகம்... பணத்தை அள்ளப்போகும் இந்த 3 ராசிகள்

Sun, 05 Jan 2025-1:36 pm,

ஜோதிடத்தின்படி, அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட காலகட்டத்தில் 12 ராசிகளுக்கு இடையே தங்களது நிலையை மாற்றிக்கொண்டே இருக்கும். இந்த கிரகப் பெயர்ச்சிகள் 12 ராசிகளின் வாழ்விலும் பெரும் தாக்கம் செலுத்தும் என நம்பப்படுகிறது. 

 

அப்படியிருக்க அதில் சந்திர பகவானே அடிக்கடி பெயர்ச்சி அடைவார். ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு சுமார் இரண்டரை நாள்களில் பெயர்ச்சி அடைவார். இதனால், சில கிரகங்களுடன் அடிக்கடி ஒரே ராசியில் இணைவார். 

 

அந்த வகையில், வரும் ஜன.9ஆம் தேதி இரவு 8.46 மணியளவில் சந்திர பகவான் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைகிறார். ரிஷபத்தில் ஏற்கெனவே குரு பகவான் இருப்பதால், குருவும் சந்திரனும் இணையும் போது கஜகேசரி ராஜயோகம் (Gajakesari Rajayog) உருவாகும். 

 

குரு - சந்திரன் இணைவதால் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கம் இருக்கும் என்றாலும், இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிகமாக செல்வம் கொட்டும். அந்த 3 ராசிகள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.

 

ரிஷபம் (Taurus): கஜகேசரி ராஜயோகத்தால் இந்த ராசிக்காரர்கள் எந்த துறையில் இருந்தாலும் வெற்றியே கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி அடைவீர்கள். எதிரிகள் உங்களுக்கு எதிராக குழிப் பறித்தாலும், அதனை நீங்கள் சாமர்த்தியமாக எதிர்கொள்வீர்கள். பணியிடத்தில் மூத்தவர்கள் உங்களின் வேலையை பாராட்டுவார்கள். இதனால் உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். 

தனுசு (Sagittarius): இந்த காலகட்டத்தில் உங்களின் நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். கடன்களை முடித்துவிடுவீர்கள். உங்களின் உடல்நலமும் சிறப்பாக இருக்கும். உங்களின் பார்ட்னர் உடன் வெளியே செல்ல திட்டமிடுவீர்கள். பூர்வீக சொத்து உங்களுக்கே கிடைக்கும். நீங்கள் வேலையில் அதிகம் கவனம் செலுத்தினால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். 

கும்பம் (Aquarius): உங்களின் நீண்டகால கடின உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். பணியிடத்தில் உங்களுக்கு பெரிய பொறுப்பு கிடைக்கும். நீண்டகாலமாக நிறைவடையாமல் இருக்கும் வேலை இந்த காலகட்டத்தில் முடிந்துவிடும். லட்சுமி தேவியின் அருளால் உங்களுக்கு பணமும் கொட்டும், வணிகமும் விரிவடையும். 

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை ஜீ நியூஸ் (Zee News) உறுதிசெய்யவில்லை. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link