பொது இடங்களில் போன், லேப்டாப் சார்ஜ் செய்வது பாதுகாப்பானது தானா...

Thu, 12 Sep 2024-10:39 am,

இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில், லேப்டாப் மொபைல் ஆகியவை, ஆடம்பர பொருளாக இல்லாமல், அத்தியாவசிய பொருட்கள் என்ற நிலையை அடைந்து விட்டன. சில நேரங்கள் அவை செயல் இழந்தாலும், நமது பணிகள் அனைத்தும் முடங்கி போகும் நிலை ஏற்படுகிறது.

பேட்டரிகளை சார்ஜ்: நோட்புக்குகளில் பணியாற்றிய காலம் போய், இப்போது கம்ப்யூட்டரில் பணியாற்றும் காலம் தொடங்கிவிட்டது. மாணவர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவருக்கும் லேப்டாப் தேவை..இந்நிலையில் மொபைல் மற்றும் லேப்டாப் சீராக வேலை செய்ய, அதன் பேட்டரிகளை அவ்வப்போது சார்ஜ் செய்ய வேண்டும்.

வீட்டில் அல்லது அலுவலகத்தில் பணியாற்றும் போது, சார்ஜிங் குறித்த பிரச்சனை ஏற்படாது. ஆனால் வெளியில் சென்று வேலை பார்க்கும் போது, நம்மிடம் சார்ஜர் இல்லை என்றாலும், அல்லது வேறு சில காரணங்களுக்காகவும், பொது இடத்தில் சார்ஜிங் பயன்படுத்தும் நிலை ஏற்படலாம். 

பொது இடங்களில் சார்ஜ் செய்வது பாதுகாப்பானது அல்ல என்று வல்லுநர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். பொது இடங்களில் சார்ஜ் செய்வதால், நமது தரவுகள் திருடப்படும் ஆபத்து உள்ளது என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். இதன் மூலம் சைபர் மோசடிக்கு ஆளாகும் நிலை ஏற்படலாம்.

சாதனம் பழுதாகும் வாய்ப்பு: பொது இடங்களில் சார்ஜ் செய்யும் போது, நமது சாதனம் பழுதாகும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. அதோடு சில இடங்களில், குறிப்பாக ரயில்களில் வைக்கப்பட்டிருக்கும் சார்ஜிங் பாய்ண்டுகளில், லேப்டாப்பை சார்ஜ் செய்வது பாதுகாப்பானது அல்ல என்று குறிப்பிடப்பட்டிருக்கும் எச்சரிக்கை அறிவிக்கையையும் பார்க்கலாம்.

சார்ஜிங் பாயிண்ட்: ரயில்களில் இருக்கும் சார்ஜிங் பாயிண்ட்கள் குறைந்த வோல்டேஜ் கொண்டவை. எனவே அதில் சார்ஜ் செய்யும்போது, நீண்ட நேரம் எடுப்பதுடன், உங்கள் சாதனம் பழுதடையும் வாய்ப்பும் உள்ளது. 

 

சைபர் மோசடி: மொபைல் போன் லேப்டாப், உள்ளிட்ட உங்கள் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் பாதுகாப்பாக இருக்கவும், தரவுகள் திருடப்படுவதைத் தவிர்க்கவும். சைபர் மோசடிக்கு ஆளாகாமல் தப்பிக்கவும், பொது இடங்களில் சார்ஜ் செய்வதை தவிர்ப்பது நல்லது.

மொபைலை பொருத்தவரை, பயண நேரத்தின் போது பேட்டரி தீர்ந்து போகும் பிரச்சனையை தவிர்க்க, உங்களுடன் பவர் பேங்க் எடுத்துச் செல்வது நல்லது. இதன் மூலம் பொது இடங்களில் சார்ஜ் செய்யும் பிரச்சனையை தவிர்க்கலாம்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link