ரூ.50,000-க்குள் அசத்தலான விலையில் கிடைக்கும் அட்டகாசமான மின்சார ஸ்கூட்டர்கள்

Sat, 06 Nov 2021-4:10 pm,

50 ஆயிரம் வரம்பில் வரும் மின்சார ஸ்கூட்டர்களின் பட்டியலில் ஆம்பியர் வி48-ன் (Ampere V48) பெயர் முதலிடத்தில் உள்ளது. இந்த ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ .39,990 முதல் தொடங்குகிறது. இந்த ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 60 கிமீ தூரத்தை அது கடக்கும். 

Hero Electric Flash LX (VRLA) இன் டெல்லி-NCR இன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.46,640 ஆகும். நிறுவனம் இந்த ஸ்கூட்டரை சிவப்பு மற்றும் வெள்ளை என இரண்டு வண்ணங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஸ்கூட்டர் அதிகபட்சமாக 25 கிமீ வேகத்தில் செல்லும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 கிமீ வரை இயக்க முடியும். 

நாட்டின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ எலக்ட்ரிக் ஆப்டிமா எல்எக்ஸ் (விஆர்எல்ஏ) ஸ்கூட்டரை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. டெல்லியில் இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.51,440 ஆகும். நீங்கள் அதை வெள்ளை, நீலம் மற்றும் சாம்பல் ஆகிய மூன்று வண்ணங்களில் வாங்கலாம். இந்த ஸ்கூட்டரை அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகத்தில் மட்டுமே ஓட்ட முடியும். 

குறைந்த பட்ஜெட்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க எண்ணம் கொண்டவர்களுக்கு ஆம்பியர் ரியோ பிளஸ் நியூ முதல் தேர்வாக இருக்கும். இந்த ஸ்கூட்டரின் லீட் ஆசிட் பேட்டரி வகையின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.45,520 ஆகும். இந்த ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 65 கிமீ வரை இயக்க முடியும். முழு சார்ஜ் செய்ய 6 மணி நேரம் ஆகும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கி.மீ ஆகும். 

இந்த ஸ்கூட்டரின் விலை லோஹியா ஓமா ஸ்டாரின் இணையதளத்தில் கொடுக்கப்படவில்லை. ஆனால் அறிக்கைகளின்படி, இந்த ஸ்கூட்டர் ரூ .45,368  என்ற ஆரம்ப விலையில் வருகிறது. இது 25Kmph அதிகபட்ச வேகத்தைக் கொண்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 60Km வரை இதனால் பயணிக்க முடியும். இது 250W க்கும் குறைவான BLDC மோட்டார் கொண்டுள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link