இந்தியாவின் முன்னணி மின்சார ஸ்கூட்டர்கள்: சூப்பர் அம்சங்கள், செம வேகம்
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓலா எஸ் 1 மணிக்கு 115 கிமீ வேகம் கொண்டது. இது 3.0 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 40 கிமீ வேகத்தை எட்டுகிறது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை 99,999 ரூபாய் ஆகும். ரூ .499 செலுத்தி இதை முன்பதிவு செய்யலாம். இந்த ஸ்கூட்டர் 10 வண்ணங்களில் கிடைக்கும். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், இது 181 கிமீ தூரத்தை அடைகிறது.
ஏதர் எனர்ஜியின் மின்சார ஸ்கூட்டர் ஏத்தர் 450 எக்ஸ், வேகத்தின் அடிப்படையில் ஒரு சிறந்த ஸ்கூட்டர் ஆகும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிலோமீட்டராக உள்ளது. இது 0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை 3.3 வினாடிகளில் எட்டும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை 1,44,500 ரூபாய். இது முழு சார்ஜில் 116 கிமீ பயணத்தை நிறைவு செய்கிறது.
சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்கூட்டர் சிம்பிள் ஒன் ஆகும். இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 105 கிமீ ஆகும். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், இந்த ஸ்கூட்டர் 236 கிமீ பயணிக்கிறது. இது வெறும் 2.95 வினாடிகளில் 0 முதல் 40 கிமீ வேகத்தை எட்டும்.
டிவிஎஸ் மோட்டாரின் மின்சார ஸ்கூட்டர் டிவிஎஸ் ஐ-க்யூப் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 78 கிலோமீட்டர் ஆகும். டெல்லியில் இதன் ஆன்-ரோட் விலை ரூ. 1,00,777. இது முழு சார்ஜில் 75 கிமீ பயணத்தை நிறைவு செய்கிறது. இந்த ஸ்கூட்டரை நீங்கள் 2251 ரூபாய் இஎம்ஐ யிலும் வாங்கலாம்.