மிகக்குறைந்த விலை, அட்டகாசமான மைலேஜ்: இந்தியாவின் அசத்தல் மலிவு விலை கார்கள்
டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் சந்தையில் பஞ்ச் மைக்ரோ எஸ்யூவியை ரூ.5.83 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. டாடா பஞ்சின் டாப் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.89 லட்சம் வரை உயர்கிறது. இது நிறுவனத்தின் சப்-4 மீட்டர் எஸ்யுவி ஆகும். இது டாடா நெக்சானுக்கு கீழே வைக்கப்பட்டுள்ளது. இது சிறிய அளவிலான எஸ்யூவியைத் தவிர கிராஸ் ஹேட்ச்பேக் உடன் போட்டியிடும் என்பதால் இதன் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும்.
மாருதி சுஸுகி இந்தியா 2021 ஆம் ஆண்டிற்கான புதிய தலைமுறை செலிரியோவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.5.25 லட்சமாகும். இந்த விலை டாப் மாடலுக்கு ரூ.7 லட்சம் வரை செல்கிறது. நிறுவனம், ஒரு லிட்டருக்கு 26.68 கிமீ மைலேஜ் தரும் புதிய தலைமுறை 1.0 லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் எஞ்சினை முதல் முறையாக காருடன் வழங்கியுள்ளது.
ரெனால்ட் க்விட்-இன் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டு அதிக நாட்கள் ஆகவில்லை. தோற்றம் மற்றும் அம்சங்களில் பல மாற்றங்களுடன் நிறுவனம் இதனை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.50 லட்சம் ஆகும். இது டாப் மாடலுக்கு ரூ.5.94 லட்சம் வரை செல்கிறது.
மாருதி சுஸுகி ஆல்டோ நீண்ட காலமாக வாடிக்கையாளர்களின் முதல் தேர்வாக இருந்து வருகிறது. ஆல்டோவின் ஆரம்ப விலை ரூ.3.39 லட்சமாக உள்ளது, இது டாப் மாடலுக்கு ரூ.5.03 லட்சமாக உயர்கிறது. இந்த காரில் 796 சிசி, 3-சிலிண்டர், 12-வால்வு எஞ்சின் 47.33 பிஎச்பி பவரையும், 69 என்எம் பீக் டார்க் திறனையும் உருவாக்குகிறது. இந்த காரின் எஞ்சின் பெட்ரோலின் அடிப்படையில் மிகவும் சிக்கனமானது மற்றும் ஒரு லிட்டரில் இது 22.05 கிமீ வரை இயங்கும். விலை மற்றும் மைலேஜ் ஆகியவற்றின் கலவையுடன், இந்த கார் நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வாக உள்ளது.