சென்னையில் துபாய் செல்லும் பயணிகளிடமிருந்து ரூ .51.28 லட்சம் பறிமுதல்

Thu, 08 Apr 2021-9:17 pm,

திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த 37 வயதான சதகதுல்லா என்பவர் 26,000 சவுதி ரியால்களும் 2400 அமெரிக்க டாலர்களும் மறைத்து வைத்திருந்தா. அவரது பையில் கருப்பு  நிற ஒட்டும் டேப்பினால் அதை ஒட்டி மறைத்து வைத்திருந்தார். 

 2015 FEMA   (நாணய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி) ஒழுங்குமுறை, சுங்க சட்டத்தின் கீழ்  மீட்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

முகமது அலி அக்பர், முகமது அப்துல்லா, அபு ஜவித் மற்றும் ஷாஜகான் ஆகிய நான்கு நபர்கள் குடியிறக்க பிரிவில் இருந்து பாதுகாப்புப் பகுதியை நோக்கிச் சென்ற போது சந்தேகத்தின் பேரில்தடுத்து நிறுத்தப்பட்டனர்.

34,700 சவுதி ரியால் மற்றும் 1140 குவைத் தினார், 1,26,000 சவுதி ரியால்ஸ், 2300 அமெரிக்க டாலர்கள், 440 குவைத் தினார் மற்றும் 1050 ஓமான் ரியால் ஆகியவை அவர்களின் லக்கேஜ்களில் இருந்த வெற்று குழாய்களில் இருந்து மீட்கப்பட்டன. 

மொத்தம் 2,01,700 சவுதி ரியால்ஸ், 4700 அமெரிக்க டாலர்கள், 1580 குவைத் தினார் மற்றும் 1050 ஓமான் ரியால்,  என மொத்தம் 51.28 லட்சம் மீட்கப்பட்டு  பறிமுதல் செய்யப்பட்டது.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link