ஐபிஎல் மெகா ஏலம்... கும்பிடு போட்டு சிஎஸ்கே கழட்டிவிடப் போகும் 5 ஸ்டார் வீரர்கள்!
ஐபிஎல் 2024 தொடர் நடைபெற்று வருகிறது. பிளே ஆப் சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், வரும் மே 26ஆம் தேதி சென்னையில் நடைபெறும் இறுதிப்போட்டியோடு நிறைவடைகிறது.
தொடர்ந்து, அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன் மெகா ஏலம் நடைபெறும். இந்த மெகா ஏலத்தை முன்னிட்டு ஒவ்வொரு அணிகளாலும் சில வீரர்களை மட்டுமே தக்கவைக்க இயலும். மற்ற அணிகளை ஏலத்திற்கு முன் விடுவிக்க வேண்டும்.
கடந்த 2022 மெகா ஏலத்தை முன்னிட்டு ஒவ்வொரு அணிகளும் தலா 4 வீரர்களை தக்கவைக்க அனுமதி வழங்கப்பட்டது. அதிலும் தொடர்ந்து மூன்றுக்கும் மேற்பட்ட இந்தியர்களையும், இரண்டுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்களையும் தக்கவைக்க முடியாது.
இந்த முறை ஒரு அணி எத்தனை வீரர்களை தக்கவைக்கலாம் என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் மெகா ஏலத்தை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விடுவிக்க வாய்ப்புள்ள 5 முன்னணி வீரர்கள் குறித்து இதில் காணலாம்.
தீபக் சஹார்: இவரை கடந்த ஏலத்தில் 14 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே எடுத்தது. பவர்பிளேவில் மட்டும் ஸ்பெஷலிஸ்டாக இருக்கும் இவரை டெத் ஓவர்களில் சிஎஸ்கே அணியால் பயன்படுத்த முடியவில்லை. அடிக்கடி காயமும் அடைந்துவிடுகிறார் என்பதால் இந்த முறை சிஎஸ்கே இவரை விடுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டேரில் மிட்செல்: ராயுடு இடத்தை நிரப்ப கடந்த மினி ஏலத்தில் 14 கோடி ரூபாய் கொடுத்து சிஎஸ்கே எடுத்தது. இவர் இந்த தொடரில் சுமாராக விளையாடினாலும் இவரின் தொகை அதிகம் என்பதால் இவரை விடுவித்துவிட்டு, ஏலத்தில் குறைந்த தொகைக்கு சிஎஸ்கே முயற்சிக்கும் எனலாம்.
ஷர்துல் தாக்கூர்: இவரை கடந்த 2022 மெகா ஏலத்தில் விடுவித்த சிஎஸ்கே, 2024 மினி ஏலத்தில் மீண்டும் 4 கோடி ரூபாய்க்கு எடுத்தது. இருப்பினும் இவரின் பந்துவீச்சு சிஎஸ்கேவுக்கு இந்த முறை பெரிதாக கைக்கொடுக்காததால் இவரை நிச்சயம் விடுவிக்கும் எனலாம்.
மொயின் அலி: 2021ஆம் ஆண்டில் இருந்து சிஎஸ்கேவில் இருக்கும் மொயின் அலி 2021 மற்றும் 2023 ஆகிய இரு ஆண்டுகளில் அந்த அணி கோப்பையை வெல்ல உதவியவர்களில் ஒருவர். இவரின் ஆப் ஸ்பின் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டிங் சிஎஸ்கேவுக்கு பலனளித்தாலும் இவரை விடுவிக்க சிஎஸ்கே முயற்சிக்கும்.
ரஹானே: ரஹானேவை கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி எடுத்த நிலையில், நடப்பு தொடர் அவருக்கு சிறப்பாக அமையவில்லை. எனவே, இவரை விடுவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.