அக்டோபர் 1 முதல் உங்க செக் புக் செல்லுமா? செல்லாதா?
அலகாபாத் வங்கியின் MICR குறியீடு மற்றும் காசோலை புத்தகம் 30 செப்டம்பர் 2021 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்று இந்தியன் வங்கி சமீபத்தில் ஒரு ட்வீட்டில் தெரிவித்தது. எந்தவொரு இடையூறும் இல்லாமல் வங்கி பரிவர்த்தனைகளைத் தொடர, வாடிக்கையாளர்கள் 1 அக்டோபர் 2021 க்கு முன் புதிய காசோலை புத்தகங்களை பெற வேண்டும்.
இந்தியன் வங்கியின் கூற்றுப்படி, வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள கிளையில் இருந்து புதிய காசோலை புத்தகங்களைப் பெறலாம். இது தவிர, வாடிக்கையாளர்கள் இணைய வங்கி (Internet Banking/Online Banking) அல்லது மொபைல் பேங்கிங் (Mobile Banking) மூலமும் விண்ணப்பிக்கலாம்.
PNB சமூக ஊடகங்கள் மூலம், "அக்டோபர் 1, 2021 முதல், ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (OBC) மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவற்றின் பழைய காசோலை புத்தகங்கள் பயன்பாட்டில் இருக்காது. தயவுசெய்து OBC மற்றும் UBI இன் பழைய காசோலை புத்தகத்தை பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் மாற்றவும். இந்த காசோலை புத்தகம் PNB-யின் அப்டேட் செய்யப்பட்ட IFSC குறியீடு மற்றும் MIRC உடன் வரும்." என்று கூறியுள்ளது.
புதிய காசோலை புத்தகத்தை பெற, ஏடிஎம், இணைய வங்கி அல்லது பிஎன்பி ஒன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.