பொதுமக்களின் புகார் மனு மீது ஒரு மாதக்கால கெடு..தமிழக அரசு அதிரடி உத்தரவு!!
தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் பிரச்சனைகள் தொடர்பான அனைத்து புகார் மனுக்களையும் சரியான முறையில் கவனமுடன் கையாளவேண்டியது அரசு ஊழியர்களின் தீவிரப் பணியாக இருக்க வேண்டும். அரசு ஊழியர்கள் அலட்சியமாக இருக்காமல் பொதுமக்களின் கோரிக்கைகளை உரிய முறையில் ஏற்று அக்கோரிக்கைக்கு உரிய தீர்வுகளை கொடுக்க வேண்டிய அவசியம் ஒவ்வொரு அரசு ஊழியர்களுக்கும் இருக்க வேண்டும்.
தமிழக அரசு ஊழியர்களுக்குத் தலைமை செயலாளர் முருகானந்தம் அதிரடி முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் அடிப்படையில் தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகம், வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு அலுவலகத்தில் பொதுமக்கள் அரசின் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கை அடிப்படையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான புகார் மனுக்கள் அளித்து வருகின்றனர்.
பொதுமக்களின் புகார் மனுக்கள் நாளொன்றுக்கு அதிகமாக வருவதால் அரசு ஊழியர்கள் நீண்ட காலதாமதம் எடுத்துக்கொள்கின்றனர். மேலும் அரசு ஊழியர்கள் பொதுமக்களின் புகார் மனுக்களுக்குச் சரியான பதிலளிக்காமலிருந்து வருவதாகக் குற்றஞ்சாட்டி வந்தனர்.
பொதுமக்களின் புகார் தொடர்பாக வரும் மனுக்களை அவர்கள் மனு அளித்த நாளிலிருந்து அதிகபட்சம் ஒரு மாத காலத்திற்குள் பொதுமக்களின் புகார்களை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் அவர்களுக்குப் புகார் மனு மீதான மூன்று நாட்களில் ஒப்புகை சீட்டு வழங்கப்பட வேண்டும் என்றும், பொதுமக்களின் புகார் மனுக்கள் மீதான ஏதேனும் முன்னேற்றம் குறித்து அவர்களுக்கு உரிய நேரத்தில் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக அரசு ஊழியர்கள் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்களில் மேலும் கால அவகாசம் தேவைப்படும்பட்சத்தில் புகார் அளித்த சம்பந்தப்பட்ட நபரிடம் எழுத்துப் பூர்வமாக அவர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்களில் ஏதேனும் சாத்தியமில்லாத புகார்கள் கண்டறிந்தால் அந்த புகார் மனு அளித்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் நியாயமான பதில் வழங்கப்பட வேண்டும் என்று தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு அனைத்து அரசு செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோர்கள் இதனைக் கவனமாகப் பின்பற்றிக் கையாள வேண்டும் மற்றும் மாதம் தோறும் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு வேண்டும் எனவும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.