Health Tips: கொத்தவரங்காயை கண்டா ஓடறீங்களா... இந்த செய்தி உங்களுக்குத் தான்!
கொத்தரவரங்காய் எனப்படும் க்ளஸ்டர் பீன்ஸ் சுவையில் அற்புதமானது என கூற இயலாது, ஆனால் நம் ஆரோக்கியத்திற்கு வியக்கத்தக்க அளவில் நன்மை பயக்கும் காய்கறியாக உள்ளது. கொத்தரவரங்காயில், ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
கொத்தரவரங்காய் இதயத்திற்கு நல்லது. ஏனெனில் இது LDL அல்லது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் ஆகியவை இருதய பிரச்சினைகள் வரமால் பாதுகாக்கின்றன.
கொத்தவரங்காயில் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட காய்கறி. இதனால், இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதில்லை. அதே போல் அதில் உள்ள டைனின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மிகவும் உதவியாக இருக்கும்.
கொத்தவரங்காய கால்சியத்தின் களஞ்சியமாக கருதப்படுகின்றன. கொத்தரவரங்காய்கள் கால்ஷியம் பற்றாக்குறை உள்ளவர்களுக்கு சிறந்த தேர்வாகக் கருதப்படுகின்றன. மேலும் இதில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் எலும்புகளை வலிமையாக்குகின்றன.
கொத்தவரங்காயில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. இதை அடிக்கடி சேர்த்துக் கொண்டால், செரிமான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.