Weight Loss Tips: என்ன செஞ்சாலும் தொப்பை குறையலையா... `இந்த` தவறுகள் காரணமாக இருக்கலாம்
)
உடல் பருமன், குறிப்பாக இடுப்பை சுற்றியுள்ள பகுதியில் சேர்ந்திருக்கும் தொப்பை கொழுப்பு குறையாமல் இருந்தால், உடல் நோய்களின் கூடாரமாக ஆகி விடும். பருமன் மற்றும் தொப்பையை குறைக்க, கடுமையான உடல் பயிற்சி செய்த போதிலும், சிலருக்கு உடல் எடை குறையாமல் இருக்கலாம். இந்நிலையில், எடை இழப்பு முயற்சிகளை பாழாக்கும் சில பழக்கங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
)
தாமதமாக இரவு உணவு எடுத்துக் கொள்ளுதல்: தூங்கும் முன் சாப்பிடும் பழக்கம் பலருக்கு உண்டு. ஆனால் இந்த பழக்கம் உங்கள் எடை அதிகரிப்பிற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். இரவில் தாமதமாக சாப்பிடுவதால், உணவு ஜீரணிக்க உடலுக்கு நேரம் கிடைக்காது, அது கொழுப்பாக சேமிக்கப்படுகிறது. இது தவிர, இரவில் தாமதமாக சாப்பிடுவது தூக்கத்தையும் கெடுத்து வளர்சிதை மாற்றமும் மந்தமாகிறது.
)
பதப்படுத்தப்பட்ட உணவை அதிகமாக உட்கொள்வது: இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில், பதப்படுத்தப்பட்ட உணவை அதிகம் உண்ணும் பழக்கம் பலருக்கு உள்ளது. இவற்றில் உப்பு, சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற எண்ணெய்கள் அதிக அளவில் இருப்பதால் உடல் எடை கூடும். பதப்படுத்தப்பட்ட உணவில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் என்பது மருந்துக்கும் இல்லை.
தண்ணீர் குறைவாக குடிக்கும் பழக்கம்: தண்ணீர் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, நச்சுகளை வெளியேற்றுகிறது மற்றும் பசியைக் குறைக்கிறது. போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது நீரிழப்புக்கு காரணமாகிறது. வளர்சிதை மாற்றம் என்னும் மெட்டபாலிஸம் மந்தமாகிறது. இது எடை அதிகரிக்க வழிவகுக்கும்.
அதிகப்படியான மது பானம்: மது பானங்களில், கலோரிகளில் மிகவும் அதிகமாக உள்ளது. இது தவிர, மது அருந்துவதால் பசி அதிகரிக்கும். இதனால், அளவிற்கு அதிகமாக சாப்பிடுவீர்கள். ஆல்கஹால் உங்கள் கல்லீரலையும் சேதப்படுத்துகிறது. இதனால், உடல் எடை, குறிப்பாக தொப்பை கொழுப்பு அதிகரிக்கும்.
தூக்கமின்மை: போதுமான தூக்கம் இல்லாததால் உடலில் கார்டிசோல் ஹார்மோனின் அளவு அதிகரிக்கிறது. இந்த ஹார்மோன் பசியை அதிகரிக்கிறது. கொழுப்பு திரட்சியை ஏற்படுத்துகிறது. கூடுதலாக, தூக்கமின்மை வளர்சிதை மாற்றத்தை மந்தமாக்குகிறது. இது எடை அதிகரிக்க வழிவகுக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.