ஜாதி பத்தி பேசுவதா? பிரதமர் மோடிக்கு எதிராக “உரிமை மீறல் நோட்டீஸ்” -காங்கிரஸ்
தற்போது நாடாளுமன்றத்தில் நடந்து வரும் பட்ஜெட் விவாத கூட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த விவாதம் நடைபெற்றது.
காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பாஜக சார்பில் பேசிய எம்பி அனுராக் தாக்கூர் பதில் அளிக்கையில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் ஜாதி குறித்து என பேசியது பெரும் புயலைக் கிளப்பி உள்ளது.
ஜாதி தெரியாதவர்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள் என மக்களவையில் பாஜக எம்பி அனுராக் தாகூர் கூறினார்.
ராகுல் காந்திக்கு ஜாதி எதுவென்று தெரியாது என பாஜக எம்பி அனுராக் தாக்கூர் மக்களவையில் பேசியிருந்த வீடியோவை தனது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்திருந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, "முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக எம்பியுமான அனுராக் தாக்கூர் பேசியதை அனைவரும் கண்டிப்பாக கேட்க வேண்டும்" என பதிவிட்டு இருந்தார்.
நாட்டின் பிரதமரே இப்படி செய்யலாமா.. என எதிர்கட்சிகள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் புகார் அளிக்க காங்கிரஸ் ஆலோசனை மேற்கொண்டு வந்தது.
இறுதியாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளது.