கெட்ட கொழுப்புகள் குறையும்... இந்த 7 சட்னிகளை உணவில் சேருங்கள்!
தேங்காய் சட்னி: நல்ல பிரஷ்ஷான தேங்காய்களுடன், பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் சேர்த்து இந்த சட்னியை அரைப்பார்கள். இது நம் தென்னிந்தியாவில் அதிகம் பழக்கப்பட்டது. எனினும் கெட்ட கொழுப்புகளை குறைக்கவும், இதய ஆரோக்கியத்திற்கும் உதவும்.
பீட்ரூட் சட்னி: பீட்ரூட்டில் அதிக ஃபைபர் இருக்கிறது. இதுவும் குறைந்த கொலஸ்ட்ராலை கொண்டது. சமைத்த பீட்ரூட்டை வைத்து வழக்கமான மசாலாக்களை கலந்து இந்த சட்னியை செய்யலாம்.
தக்காளி சட்னி: தக்காளியில் லைகோபீன் அதிகமாகி உள்ளது. இதனால் கொலஸ்ட்ரால் அளவு குறைக்க உதவும். இந்த சட்னியை வெங்காயம், காய்ந்த மிளகாயை நன்கு வதக்கி தக்காளியையும் சேர்த்து அரைக்கலாம்.
புதினா சட்னி: புதினா செரிமானத்தை சீராக்க உதவும். கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும். புதினா, பச்சை மிளகாய் உடன் இந்த சட்னியை செய்யலாம். யோகர்ட்டை கூட இதில் சேர்க்கலாம். சிக்கன், சப்பாத்தி போன்ற உணவோடு சேர்த்து சாப்பிடலாம்.
மல்லி சட்னி: நல்ல பிரஷ்ஷான மல்லி இலைகள், பச்சை மிளகாய், லமென் ஆகியவற்றை சேர்த்து மல்லி சட்னியை செய்யலாம். இந்த சட்னியில் அதிக ஆண்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, குறைந்த கொல்ஸ்ட்ராலை கொண்டது.
வெந்தய சட்னி: வெந்தயம் கொலஸ்ட்ராலை குறைக்கும் பண்புகளை கொண்டுள்ளது. எனவே, வெந்தயத்தை ஊறவைத்து, பச்சை மிளகாய், எலுமிச்சை சாரு ஆகியவற்றை கலந்து சட்னியை செய்யவும்.
பூண்டு சட்னி: பூண்டு எப்போதுமே இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த தேர்வாகும். அந்த வகையில், தேங்காய், காய்ந்த மிளகாய் ஆகியவற்றுடன் பூண்டையும் சேர்த்து பூண்டு சட்னியை செய்யலாம். இது ருசியாகவும் இருக்கும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான மற்றும் வீட்டு மருத்துவம் சார்ந்த தகவல்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.