கீரை பிடிக்காதா, பரவாயில்லை... இந்த உணவுகளிலும் இரும்புச்சத்து எக்கச்சக்கமா இருக்கு!
பருப்பு: சைவ உணவில் கீரையை விட இரும்புச்சத்து இதில் அதிகம் உள்ளது.
பூசணி விதைகள்: இந்த விதைகளில் இரும்புச்சத்து மட்டுமின்றி மேக்னீஸியம் மற்றும் தாது சத்தும் அதிகம் உள்ளது.
தினை: சீமைத் தினை எனப்படும் இந்த சிறுதானியத்தில் அதிக இரும்புச்சத்து உள்ளது. இதில் புரதமும் அதிகம் இருக்கும்.
டார்க் சாக்லேட்: கோகோ அதிகம் இருக்கும் காரணத்தால் இதில் இரும்புச்சத்து அதிகம் இருக்கும். ஆண்டிஆக்ஸிடன்ட்களும் அதிகம் இருக்கும்.
கல்லீரல்: அசைவத்தில் கல்லீரலில் அதிக இரும்புச்சத்து இருக்கும். அதுவும் கீரையை விட டபுள் மடங்கு இருக்கும்.
சிப்பி உணவு வகைகள்: கடல்சார்ந்த உணவான இதிலும் இரும்புச்சத்து அதிகம் இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இது பொதுவான தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. இனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெறவும். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.