உடல் பருமன் பிரச்சனை தீர.... இந்த 5 உணவுகள் உங்களுக்கு கை கொடுக்கும்

Mon, 24 Jul 2023-4:56 pm,

எடை இழப்பு: உடல் எடையை இழக்க மக்கள் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள்.

பொட்டாசியம்: எடை இழப்புக்கான உங்கள் முயற்சியில் பொட்டாசியம் ஒரு இன்றியமையாத அங்கமாக உள்ளது. அத்துடன் இதில் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. 

பொட்டாசியம் நிறைந்த உணவுகள்: பொட்டாசியம் நிறைந்த உணவு எடையைக்  குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் இதயம் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். உடல் எடையை குறைக்க உங்கள் உணவில் சேர்க்கக்கூடிய 5 பொட்டாசியம் நிறைந்த உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

வாழை: வாழைப்பழம் ஒரு சூப்பர்ஃபுட் ஆகும். வாழைப்பழம் தவிர, வாழைக்காய் கொண்டு சாம்பார்/கறி/ராய்தா/கூட்டு/பஜ்ஜி ஆகியவற்றையும் செய்யலாம். 

ஆளி விதைகள்: ஆளி விதைகளில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் இன்னும் பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதை பச்சையாக சாப்பிடலாம் அல்லது ஸ்மூத்தியில் கலந்து உட்கொள்ளலாம். இவை எடையைக் குறைக்கவும் உதவுகின்றன.

மீன்: புரதம் மட்டுமல்லாமல், மீனில் பொட்டாசியம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் நிறைந்துள்ளன. இது மூளையின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

கொண்டைக்கடலை: நீங்கள் சைவ உணவு உண்பவராக இருந்தால், ஆரோக்கியமான எடை இழப்புக்கு இதுவே சிறந்த வழி. இதில் புரதம் நிறைந்துள்ளது மற்றும் சாலட், சப்ஜி, சுண்டல் போன்ற வடிவங்களில் இதை சாப்பிடலாம். 

 

ராஜ்மா: ராஜ்மாவில் பொட்டாசியம் மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இதை சாப்பிடுவதன் மூலம் உங்கள் தினசரி பொட்டாசியம் தேவையில் 35% சேர்த்துக்கொள்ளலாம்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link