`குக் வித் கோமாளி` புகழ் பவித்ரா இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க!
மாடல் அழகியான பவித்ரா லட்சுமி கடந்த 2015-ல் 'Miss Madras' பட்டத்தையும், 2017-ல் 'Queen of Madras' விருதை வென்றுள்ளார்.
நடிகர் அஸ்வின் குமாருடன் இவர் இணைந்து நடித்த 'பைலட்' என்னும் குறும்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இந்த குறும்படத்தில் வரும் 'ஹலோ சீனியர்' போன்ற சில வசனங்கள் பலரையும் கவர்ந்தது.
இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கி புகழ் வெளிச்சத்திற்கு கொண்டு சென்றது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி தான், இந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உருவானது.
பட வாய்ப்புகளை பெற இவர் சில புதைப்படங்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். தற்போது இவர் கர்லி ஹேர்ஸ்டைலில், மாடர்ன் உடை அணிந்துகொண்டு பதிவேற்றிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை வசீகரித்து வருகிறது.