COVID update: அதிகரிக்கும் கொரோனா பாதிப்பும், இரவு ஊரடங்கு உத்தரவும்..

Tue, 06 Apr 2021-9:12 pm,

கொரோனா வைரஸ் வழக்குகளில் ஏற்படும் அதிகரிப்பை சமாளிக்கும் முயற்சியாக ராஜஸ்தான் மாநிலத்தில், மல்டிப்ளெக்ஸ், ஜிம்னாசியம் ஆகியவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும்ன், ஏப்ரல் 5 முதல் 19 வரை பள்ளிகளில் 1 முதல் 9 வகுப்புகள் நடைபெறாது.  

வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இரவு ஊரடங்கு உத்தரவு இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை அமலில் இருக்கும். ஊரடங்கு உத்தரவின் போது உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் சாப்பிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. உணவகங்களில் இருந்து வீட்டிற்கு உணவு வாங்கிச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

கல்லூரிகளில் இறுதி ஆண்டுக்கு மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும். பிற ஆண்டுக்கான படிப்புகள்  இடைநிறுத்தப்படும், ஆனால் முன் அனுமதி பெற்று மாணவர்கள் தங்களது practical examsகளை முடிக்கலாம்.

நர்சிங் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் வழக்கம் போலவே செயல்படும்.

மகாராஷ்டிரா மாநிலத்தில், ஞாயிற்றுக்கிழமை முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மாநிலத்தில் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை கடுமையான இரவு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துவிட்டது. அதேபோல், வார இறுதியிலும் ஊரடங்கு அமலில் இருக்கும். அதாவது, வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கள் காலை 7 மணி வரை எந்த சேவைகளும் இருக்காது. "வார இறுதி பூட்டுதல் தவிர, இரவு 8 மணி முதல் கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும், இதன் கீழ் வணிக வளாகங்கள், பார்கள், உணவகங்கள், சிறிய கடைகள் டேக்-அவே மற்றும் பார்சல்களுக்கு மட்டுமே திறக்கப்படும். அரசு அலுவலகங்கள் 50 சதவிகித ஊழியர்களை கொண்டு மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்” என்று மாநில அமைச்சர் நவாப் மாலிக் கூறினார்.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த குஜராத் அரசு முடிவெடுத்துள்ளது. ஏப்ரல் 15 வரை இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை அகமதாபாத், சூரத், வதோதரா மற்றும் ராஜ்கோட் ஆகிய இடங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தலைநகரில் கொரோனா வைரஸ் வழக்குகள் அதிவேகமாக அதிகரித்து வரும் நிலையில், டெல்லி அரசு செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி முதல் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. உடனடியாக நடைமுறைக்கு வந்த இந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30 காலை 5 மணி வரை நீடிக்கும்.

மாநிலத்தில் கோவிட் -19 பாதிப்புகள் துரிதமாக அதிகரிப்பதை கவனத்தில் கொண்டு, ஏற்கனவே இருக்கும் கோவிட் -19 தொடர்பான தடைகளை ஏப்ரல் 10 வரை நீட்டிக்க பஞ்சாப் அரசு  உத்தரவிட்டது. அதேபோல் இரவு ஊரடங்கு உத்தரவை ஒன்பது முதல் 11 வரை நீட்டிக்க அரசாங்கம் அறிவித்தது. இவற்றில் லூதியானா மற்றும் பாட்டியாலா ஆகியவை அடங்கும். ஊரடங்கு உத்தரவு இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இருக்கும்.

மாநிலத்தில் கோவிட் -19 பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், ஏப்ரல் 5 முதல் 10 மாவட்டங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படுவதாக ஒடிசா அரசு சனிக்கிழமை அறிவித்தது.  சுந்தர்கர், ஜார்சுகுடா, சம்பல்பூர், பர்கர், போலங்கீர், நுவாபாடா, கலஹந்தி, நவரங்க்பூர், கோராபுத் மற்றும் மல்கங்கிரி ஆகிய மாவட்டங்களில் ஏப்ரல் 5 முதல் இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று தலைமைச் செயலாளர் எஸ் சி மொஹாபத்ரா கையெழுத்திட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய நடவடிக்கைகள் தவிர, அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள், நிறுவனங்கள் மூடப்படும். தனிநபர்களின் நடமாட்டம் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை தடைசெய்யப்படும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link