கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் ரன் அவுட் ஆகாத வீரர் யார் தெரியுமா!
கிரிக்கெட்டில் ரன் அவுட் ஆவது மிகவும் சாதாரண ஒன்று தான், ரன் அவுட் ஆகாத வீரர்கள் இருப்பதே மிகவும் அரிது. இந்நிலையில் கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் ரன் அவுட் ஆகாத 5 வீரர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
பால் காலிங்வுட்
இங்கிலாந்து வீரர் பால் காலிங்வுட் தனது அணிக்காக 68 டெஸ்ட், 197 ஒருநாள் மற்றும் 36 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் அவர் ஒருமுறை கூட ரன் அவுட் ஆனதில்லை.
கபில் தேவ்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பல மறக்க முடியாத சாதனைகளை செய்துள்ளார். அவரும் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒருமுறை கூட ரன் அவுட் ஆகவில்லை.
முடாசர் நாசர்
பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் முடாசர் நாசர் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒருமுறை கூட ரன் அவுட் ஆனதில்லை. முடாசர் பாகிஸ்தானுக்காக 76 டெஸ்ட் மற்றும் 122 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
கிரேம் ஹிக்
கிரேம் ஹிக் இங்கிலாந்துக்காக 65 டெஸ்ட் மற்றும் 120 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். கிரேம் ஹிக் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒருமுறை கூட ரன் அவுட் ஆகவில்லை.
பீட்டர் மே
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பீட்டர் மே அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒருமுறை கூட ரன் அவுட் ஆனது இல்லை. 1951ம் ஆண்டு இங்கிலாந்துக்காக அறிமுகமான இவர் 66 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4537 ரன்களை அடித்துள்ளார்.