விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றதும் அரசியல்வாதியான கிரிக்கெட்டர்கள்
2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 உலகக் கோப்பையின் ஒரு பகுதியாக இருந்த புகழ்பெற்ற பேட்ஸ்மேன் கவுதம் கம்பீர், 2019 இல் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். பாரதிய ஜனதா கட்சியின் மக்களவை எம்.பி. கெளதம் கம்பீர் 2018ல் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார்.
மனோஜ் திவாரி இந்திய அணியில் வெற்றிபெறவில்லை என்றாலும் அரசியலில் அவரது வாழ்க்கை நன்றாக இருந்தது. மனோஜ் திவாரி தற்போது வங்காள அரசில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான இணை அமைச்சராக பதவி வகிக்கிறார்.
இந்திய அணியின் வெற்றிகரமான பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங் அரசியலுக்கு வந்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகிக்கிறார் ஹர்பஜன் சிங்
1983 உலகக் கோப்பை வென்ற அணியில் இருந்த ஆல்-ரவுண்டர் கீர்த்தி ஆசாத், அரசியலிலும் தனது அதிர்ஷ்டத்தை பரிசோதித்தார். கீர்த்தி ஆசாத்தின் தந்தை பகவத் ஜா ஆசாத்தும் அரசியலில் இருந்தவர் என்பதும், தற்போது TMC கட்சியில் கீர்த்தி ஆசாத் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கடந்த 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு அரசியலில் நுழைந்தார். அசாருதீன் இந்தியாவுக்காக 99 டெஸ்ட் மற்றும் 334 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.