இரண்டு முறை திருமணம் செய்துகொண்ட கிரிக்கெட் பிரபலங்கள்!

Sat, 02 Jul 2022-9:05 pm,

1987 ஆம் ஆண்டில், அசார் நவ்ரீன் என்பவரை மணந்தார், இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.  பின்னர் பாலிவுட் நடிகை சங்கீதா பிஜ்லானியை திருமணம் செய்வதற்காக 1996-ல் அசார் நவ்ரீனை விவாகரத்து செய்தார், ஆனால் அந்த உறவு 2010 இல் முறிந்தது.  இவரது இரண்டு திருமணங்களும் விவகாரத்தில் முடிந்துவிட்டது.

 

முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் 1999 உலகக் கோப்பை முடிந்த பிறகு ஜோத்ஸ்னாவை திருமணம் செய்து கொண்டார்.  ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் ஒருமனதாக விவாகரத்து செய்தனர், பின்னர் ஸ்ரீநாத் பத்திரிகையாளர் மாதவி பத்ராவலியை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.

 

அருண்லால் முதல் மனைவி ரீனாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை கவனித்துக்கொள்வதற்காக அவரை 2002-ல் விவாகரத்து செய்துவிட்டு, அதே ஆண்டில் புல்புல் சாஹாவை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். 

 

காம்ப்ளி 1988-ல் நோயெலாவை திருமணம் செய்துகொண்டார், இவர்கள் இருவரும் 2 ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து செய்தனர்.  அடுத்ததாக அவர் ஃபேஷன் மாடல் ஆண்ட்ரியா ஹெவிட் என்பவரை திருமணம் செய்துகொண்டு தற்போது இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.  

 

தினேஷ் 2007 ஆம் ஆண்டு அவரது நீண்டநாள் காதலியான நிகிதா வஞ்சாராவை மணந்தார்.  ஆனால் அவர் முரளி விஜயை காதலித்ததால் இவர்கள் இருவருக்கும் பிரிவு ஏற்பட்டது.  அதன்பிறகு 2015 ஆம் ஆண்டு ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கலை தினேஷ் திருமணம் செய்து கொண்டார். 

 

யுவராஜின் தந்தை யோகராஜ் சிங் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார்.  இந்திய ஆல்ரவுண்டரின் தாயார் ஷப்மானுடன் அவரது முதல் திருமணம் நடந்தது, பின்னர் அவர் சத்வீரை திருமணம் செய்து கொண்டார்.  அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர் தற்போது யுவராஜ் தந்தை அவரக்ளுடன் தான் வசித்து வருகிறார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link