ஐபிஎல் 2025 ஏலத்தில் ஜடேஜாவிற்கு பதில் இந்த 3 ஸ்பின்னர்களை சிஎஸ்கே டார்கெட் செய்யும்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கள் அணியில் எதிர்கால சுழல் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்ய வேண்டிய நேரம் வந்துள்ளது. அணியில் ரவீந்திர ஜடேஜா இருக்கும்போதே புதியவரை தேடுவது நல்லது.
தற்போது சான்ட்னர், மொயின் அலி, தீக்சனா போன்ற வீரர்கள் இருந்தாலும் நல்ல உள்நாட்டு சுழற்பந்து வீச்சாளர்களை அணியில் எடுக்க வேண்டியது அவசியம்.
அந்த வகையில் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இலக்கு வைக்கக்கூடிய மூன்று அன்கேப்ட் ஸ்பின்னர்களை பற்றி பார்ப்போம்.
சுயாஷ் சர்மா
சுயாஷ் ஷர்மா சமீபத்திய போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த ஆண்டு சையத் முஷ்டாக் அலி டிராபியில் சிறப்பாக பந்து வீசி இருந்தார். எனவே ஏலத்தில் சென்னை இவரை டார்கெட் செய்யலாம்.
தனுஷ் கோட்யான்
ஐபிஎல் 2025ல் சிஎஸ்கே குறி வைக்கும் இன்னொரு வீரர் தனுஷ் கோட்யான். மும்பையை சேர்ந்த இவர் அனைத்து உள்நாட்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். மேலும் பேட்டிங்கிலும் சிறிது ரன்கள் அடிக்கிறார்.
எம் சித்தார்த்
சிஎஸ்கே அணிக்கு ஏற்ற ஒரு உள்நாட்டு வீரர் சித்தார்த் தான். ஐபிஎல் 2024 போட்டியில் எல்எஸ்ஜி அணிக்காக சிறப்பாக விளையாடி இருந்தார். மிடில் ஓவர் மற்றும் பவர்பிளேயில் பந்து வீச சிறந்த தேர்வாக இருப்பார்.