மிக்ஜாம் புயல்: இடி மின்னல் கண்டிப்பாக வரும்..! இதை மட்டும் செஞ்சிடாதீங்க மக்களே

Sun, 03 Dec 2023-8:35 pm,

- மிக்ஜாம் புயல் கரையை நெருங்கும்போது இடி மின்னலுடன் கனமழை பெய்யும். அப்போது இடி மின்னல் சத்தம் அதிகமாக இருந்தால் வீட்டின் கதவு, ஜன்னல் ஆகியவற்றை அடைத்து வைத்துக் கொள்ளுங்கள்

 

- இடி மின்னல் மற்றும் மழை குறித்த லேட்டஸ்ட் தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து தொலைகாட்சியை பாருங்கள் - முடிந்தளவுக்கு பயணத்தை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். வீட்டிக்குள்ளேயே இருங்கள்

 

- கனமழையின்போது குழந்தைகள் மற்றும் வீட்டு விலங்குகள் வீட்டில் இருந்து வெளியேறாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் - மின்சாதங்களை ஆஃப் செய்து வையுங்கள். தேவையின்றி எந்த மின்சாதனத்தையும் உபயோகிக்க வேண்டாம்.

 

- மழை நீரில் குளிப்பதை தவிர்க்கவும். ஓடும் நீரில் இருந்து விலகியிருங்கள் - மின் கடத்தும் பொருட்களிடம் இருந்து மிக மிக கவனமாக இருப்பது அவசியம்

 

- தொலைபேசிகள் சார்ஜ் போட்டுக் கொண்டே பயன்படுத்தவே கூடாது. மழையின்போது அவ்வாறு செய்தால் ஆபத்து இருமடங்கு. - ஒருவேளை மழையின்போது வெளியில் இருந்தால் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு செல்ல வேண்டும்

 

- வெள்ளம் மற்றும் மழைநீர் வர வாய்ப்பில்லாத பகுதியில் தங்கியிருங்கள் - மின்னல் அதிகமாக இருக்கும் இடத்தில் நீண்ட வாக்கில் படுக்க வேண்டாம், மரங்களுக்கு அடியில் ஒதுங்காதீர்கள்

 

- மின்னலை ஈர்க்கக்கூடிய சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களில் இருந்து இறங்கவும். - படகில் சென்றால் அல்லது நீச்சல் அடித்துக் கொண்டிருந்தால் இடி மின்னலுக்கு முன்பு பாதுகாப்பான இடத்துக்கு செல்லுங்கள்

 

-  புயல் கரையை கடக்கும்போது வாகனத்தில் இருந்தால், அப்படியே இருங்கள். வாகனத்தில் இருந்து வெளியே வர வேண்டாம் - காரின் ஜன்னல்கள் மூடியிருக்க வேண்டும், மரங்கள் மற்றும் மின்கம்பிகளுக்கு அடியில் காரை நிறுத்த வேண்டாம் - மின்னல் தாக்கினால் முதலுதவி எப்படிசெய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அவசர காலத்தில் உதவியாக இருக்கும்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link