பூண்டுக்குள் பூகம்பம்: பூண்டு அதிகமானால் ஆபத்துங்க.... ஜாகிரதை!!
கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல உணவியல் நிபுணரான டாக்டர் ஆயுஷி யாதவ், பூண்டு ஆயுர்வேதத்தின் பொக்கிஷமாக கருதப்பட்டாலும், இதை அதிகமாக உட்கொண்டால், சில இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளார். பூண்டு சாப்பிடும் போது ஏன் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பூண்டு உஷ்ணமான பொருள் என்பதால், ஜலதோஷம் தொடர்பான பிரச்சனை ஏற்படும் போது பூண்டு பற்களை சாப்பிடுவார்கள். ஆனால் சிலர் அதை அதிகமாக சாப்பிடுவதால், வாயில் கடுமையான துர்நாற்றம் ஏற்படும். இது சுற்றியுள்ளவர்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. ஆகையால் இதை குறைவாக உட்கொள்ள வேண்டும்.
குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பூண்டைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது குறைந்த பிபி அதாவது ஹைபோடென்ஷனை ஏற்படுத்தும். இது உடலில் பலவீனம் மற்றும் சோர்வை ஏற்படுத்தும். எனவே சற்று எச்சரிக்கையாக இருங்கள்.
பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக பூண்டை சாப்பிட்டால், நெஞ்செரிச்சல் பிரச்சனை ஏற்படும். உண்மையில், பூண்டில் அமில கலவைகள் உள்ளன, எனவே அதை அதிகமாக உட்கொண்டால், மார்பில் கடுமையான எரிச்சல் உணர்வு ஏற்படும் அபாயம் உள்ளது. சில நேரங்களில் அது உடலின் சகிப்புத்தன்மையை மீறுகிறது, எனவே எச்சரிக்கை அவசியம்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.