மைக்ரோவேவில் உணவை சூடாக்குகிறீர்களா? இந்த செய்தி உங்களுக்குத் தான்..!!
மைக்ரோவேவில் உணவை சூடாக்கும் போதும், சமைக்கும் போதும், மின்சாரம் மற்றும் காந்த ஆற்றல் அலைகள் அதன் உள்ளே வெளியிடப்படுகின்றன. அதாவது, கதிர்வீச்சு உணவில் ஊருவுவதால் தீங்கு விளைவிக்கும்.
பலர் உணவை பிளாஸ்டிக் பாத்திரத்தில் வைத்து சூடு செய்கிறார்கள். பிளாஸ்டிக் அதிக அளவு பிஸ்பெனால்-ஏ என்னும் ரசாயனத்தை வெளியேற்றும், இது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
இது தவிர மைக்ரோவேவில் உணவைச் சூடாக்குவதும் உணவுப் பொருட்களின் சத்துக்களை அழிந்துவிடும்.
மைக்ரோவேவில் தயாரிக்கப்பட்ட, சூடாக்கப்பட்ட உணவை உட்கொள்வது செரிமான அமைப்பில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மைக்ரோவேவில் உணவைச் சூடாக்காமல், மீண்டும் மீண்டும் சூடுபடுத்தத் தேவையில்லாத உணவை உண்ண வேண்டும். வீட்டில் உணவை சூடாக்க விரும்பினால், அதை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.