பிக் பாஸ் 8 வீட்டில் வெளியேறிய தர்ஷா குப்தா சம்பளம் இத்தனை லட்சமா?
தர்ஷா குப்தா கடந்த மூன்று வாரங்களாக பிக் பாஸ் 8 வீட்டில் இருந்து வந்துள்ளார். இவர் இருந்த நாட்கள் வரையில் வாங்கிய சம்பளத்தின் தொகுப்பு விவரம் கேக்கவே ரொம்ப ஷாக்கிங்காக இருக்கும்.
தர்ஷா குப்தா பிக் பாஸ் 8 தொடங்கி சில நாட்களிலே வீட்டில் உள்ள போட்டியாளர்களால் எலிமினேஷன் செய்யபட்டார். ஒவ்வொரு வாரமும் தப்பித்து ஒடிய தர்ஷா இந்த வாரம் வெளியேறினார்.
தர்ஷா குப்தா பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களிடம் சண்டையிட்டு விளையாட்டில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார்.
பிக் பாஸ் 8 சச்சனா, அர்னவ், ரவீந்திரன் தற்போது தர்ஷா குப்தா இவர்கள் அனைவரும் கொஞ்சம் நாட்கள்கூட பிக் பாஸ் வீட்டில் இருக்க முடியவில்லை. உடனே வெளியேறினர்.
பிக் பாஸ் தமிழ் 8 ஆரம்பமே அட்டகாசமாய் தொடங்கியது. ஆனால் நாள் போக போக விறுவிறுப்பான விளையாட்டு, சண்டை மற்றும் எலிமினேஷன் போன்றவை சூடுப்பிடிக்க தொடங்கிவிட்டது.
பிக் பாஸ் 8 வீட்டில் ரவீந்தர், சச்சனா, தர்ஷா, சத்யா, தீபக், அனந்தி, சுனிதா, ஜெஃப்ரி, ரஞ்சித், பவித்ரா, சௌந்தர்யா, அருண், தர்ஷிகா, விஷால், அன்ஷிதா, அர்னவ், முத்துக்குமரன் மற்றும் ஜாக்குலின் ஆகியோர் போட்டியாளராக வீட்டிற்கு ஹாப்பியாக வெற்றி நோக்கத்தில் உள்ளே நுழைந்தனர்.
தர்ஷா குப்தா பிக் பாஸ் 8 வீட்டில் நுழைந்த முதல் நாளிலிருந்து வீட்டிலிருந்து வெளியேறிய நாட்கள் வரை சம்பளம். இவர் நாளொன்றுக்கு ரூ. 25 ஆயிரம் சம்பளம் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தர்ஷா குப்தா சம்பளம் பிக் பாஸ் வீட்டில் இருந்த வரைக்கும் கணக்கிட்டு பார்த்தால் கிட்டதட்ட ரூ. 5 லட்சம் சம்பளம் வாங்கியிருப்பது தெரியவருகிறது. பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு நாட்கள் கூடிசெல்ல சம்பளம் ஏறிகொண்டே போகும்.