Hemoglobin: ஹீமோகுளோபின் குறைபாடா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்க

Tue, 06 Dec 2022-4:31 pm,

பச்சை காய்கறிகள்: பச்சை காய்கறிகள் உங்கள் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். மறுபுறம், கீரை, ப்ரோக்கோலி மற்றும் வெந்தயம் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொண்டால், ஹீமோகுளோபின் அளவை இயற்கையாகவே நாம் அதிகரிக்கலாம்.

பிரவுன் ரைஸ்: பிரவுன் அரிசி ஆரோக்கியமான சூப்பர்ஃபுட்களில் ஒன்றாகும். இதில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது, இதன் காரணமாக ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க இது உதவுகிறது.

பூசணி விதை: ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்கள் பூசணி விதைகளை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்தும்.

உலர் பழங்கள்: உலர் பழம் உடல் எடையை குறைக்க உதவுகிறது. மறுபுறம், உங்களுக்கு குறைந்த ஹீமோகுளோபின் பிரச்சனை இருந்தால், திராட்சை மற்றும் பாதாம் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

முழு தானியங்கள்: முழு தானியங்களில் இரும்புச்சத்து இருப்பதால் ஹீமோகுளோபினை அதிகரிக்க இது உதவுகிறது. எனவே ஹீமோகுளோபின் குறைப்பாட்டிற்கு முழு தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link