இந்தியாவின் பிரபலமான விலங்கு கோவில்கள்! தூணிலும் துரும்பிலும் மட்டுமா? கழுதையிலும் கடவுள் இருக்கிறார்
வழிபாடு என்பது ஒரு தெய்வத்தை வணங்கும் பக்தியின் செயலாகும். வழிபடும் முறையானது மதத்திற்கு மதம் மாறுகிறது. ஒரே மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் வணங்கும் தெய்வங்களின் உருவமும் இடத்திற்கு இடம், குழுவிற்கு குழு மாறுபடுகிறது
ராஜஸ்தானின் துங்ரியில், ஷீத்லா ஹோலிக்கு எட்டு நாட்களுக்குப் பிறகு கொண்டாடப்படும் நாட்டுப்புறப் பண்டிகையான ஷிதாலாஷ்டமி அன்று பெண்கள் கழுதையை வணங்குகிறார்கள்.
சத்தீஸ்கரில் நாய் வழிபடப்படுகிறது
சத்தீஸ்கரின் குகுராச்பா கோவிலில் நாய் வழிபடப்படுகிறது. துர்க் மாவட்டத்தின் தம்தா பிளாக்கின் பன்பூர் கிராமத்திலிருந்து வயல்களுக்கு நடுவில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் கருவறையில் நாய் சிலை நிறுவப்பட்டுள்ளது. இது 16-17 ஆம் நூற்றாண்டில் ஒரு விசுவாசமான நாயின் நினைவாக கட்டப்பட்டது.
துங்கர்பூரில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ள கலியாகோட்டில் அமைந்துள்ள ஷீத்லா மாதா ஆலயம் மக்களின் நம்பிக்கையின் மையமாக மாறியுள்ளது. பிரார்த்தனை நிறைவேறினால், ஆடு அல்லது கோழியை நேர்ந்துவிடுவார்கள்
நேர்ந்துவிடப்படும் ஆடு மற்றும் கோழிகள் பலி கொடுக்கப்படுவதில்லை, அவற்றின் காதுகள் கத்தியால் லேசாக கீறிவிடப்பட்ட பிறகு கோவிலில் விட்டுவிடுவார்கள். அங்குகள்ள கொட்டகையில் இருக்கும் விலங்குகளுக்கு பக்தர்கள் தண்ணீர் கொடுப்பது நல்லது என்பது அந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை
இந்தூரில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான பஞ்சகுயன் ஸ்ரீராமர் கோயில் மற்றும் கேடபதி பாலாஜி கோயிலும் உள்ளது. இங்கு வரும் லட்சக்கணக்கான கிளிகளுக்கு தானியங்கள் வைக்கப்படுகின்றன. முனிவர்கள் தவம் செய்த இந்த தபோபூமியில், தற்போது கிளிகளின் வடிவில் மகான்கள் வருவதாக நம்புகின்றனர்
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் அன்னை லட்சுமி யானை மீது சவாரி செய்தும் சிலை உள்ளது. அன்னையின் இந்த வடிவம் கஜலட்சுமி வடிவில் வழிபடப்படுகிறது. உஜ்ஜயினியில் உள்ள கஜ லட்சுமி கோயிலில் ம்ட்டுமே இதுபோன்ற அரிய சிலை அமைந்துள்ளதாக கூறுகின்றனர்
பூனை வழிபாடு
கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள பெக்கலேலே கிராமத்தில் பூனையை மணகம்மா தேவியின் வடிவமாக கருதி வழிபடுகின்றனர். இந்த கிராமத்தின் பெயர் பெக்கு என்ற கன்னட வார்த்தையிலிருந்து வந்தது. இந்த வார்த்தைக்கு பூனை என்று பொருள்.