அக்ஷர்தாம் கோயிலில் தீபாவளி பூஜை நடத்தும் டெல்லி முதலமைச்சர் கேஜ்ரிவால்

Sat, 14 Nov 2020-4:17 pm,

முதலமைச்சர் கேஜ்ரிவாலின் அக்‌ஷர்தாம் பூஜைகள் ஜீ ஹிந்துஸ்தான் தொலைகாட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்படும்

புதுடில்லி: இதுவரை எப்போதும் இல்லாத வகையில் COVID-19 நோய் தாக்குதலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் முடங்கியது. அது அனைத்து துறைகளையும் முடக்கியதோடு, ஆன்மீக தலங்களையும், மதத்தளங்களையும் மூடச் செய்தது.  7 மாதங்களுக்கும் மூடப்பட்டிருந்த அனைத்து பொது இடங்களும், தற்போது பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்கலாம் என்று மத்திய அரசு தளர்வுகளை அறிவித்தது. தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோயிலும் அக்டோபர் 13 முதல் மீண்டும் திறக்கப்பட்டது.  கோவிட் -19 வழிகாட்டுதல்களை கடைபிடித்து ஆலயம்  திறக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.  

அதிகாரிகளின் கூற்றுப்படி, முதலில் மாலை 5:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி கொடுக்கப்படும்.  "அனைத்து பார்வையாளர்களும் ஆலயத்தை தரிசிக்கலாம்.  பின்மாலைப் பொழுதில் 7:15 மணிக்கு மாலை நீர் காட்சி, தோட்டங்கள், உணவகங்கள், புத்தக விற்பனை நிலையம் என அனைத்து சேவைகளும் தொடங்கப்படும்" என்று அக்‌ஷர்தாம் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

(Photo credits: www.akshardham.com)

கொரோனா வைரஸின் தாக்கத்தால், ஆலயத்தின் பல நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டிருந்தன.

(Photo credits: ANI)

ஆலயத்திற்கு வருபவர்கள், இங்கு மாலையில் நடைபெறும் மல்டிமீடியா வாட்டர் ஷோவைப் பார்த்து ரசிப்பார்கள். இந்த நிகழ்ச்சியின் பெயர் என்ன தெரியுமா? சஹஜ் ஆனந்த்.  இதன் பொருள் இயல்பான ஆனந்தம். இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும்போது, மனதில் இயல்பாக ஆனந்தம் மலரும்...

 

 

 

(Photo credits: www.akshardham.com)

மல்டிமீடியா வாட்டர் ஷோவில் மல்டி கலர் லேசர்கள், வீடியோ ப்ராஜெக்ட்ஸ், நீருக்கடியில் தீப்பிழம்புகள், வாட்டர் ஜெட் மற்றும் சிம்பொனியில் விளக்குகள் கொண்ட இசை பொழியும் நிகழ்ச்சிகள் தினசரி நடைபெறுவது இந்த ஆலயத்தின் சிறப்பு.  

(Photo credits: www.akshardham.com)

இந்திய கட்டடக் கலையின் சிறப்புகளை அடிப்படையாகக் கொண்டு, இந்திய பாரம்பரிய கலாசாரத்தை விவரிக்கும் வண்ணம் கட்டப்பட்டுள்ளது அக்‌ஷர்தாம் கோயில். 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அக்‌ஷர்தாம் ஆலயம் திறக்கப்பட்டது முதல் தினசரி பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களின் கூட்டம் அலைமோதும். 

டெல்லி அக்‌ஷர்தாம் ஆலயத்தில், அலங்கரிக்கப்பட்ட 234 தூண்கள், 9 குவிமாடங்கள், 20,000 சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

 

 

(Photo credits: www.akshardham.com)

141.3 அடி உயரம்,  316 அடி அகலம் மற்றும் 356 அடி நீளமும் கொண்டது டெல்லி அக்‌ஷர்தாம் கோயில்.

 

 

 

 

(Photo credits: www.akshardham.com)

அக்‌ஷர்தாம் கோவிலுக்கு செல்வதற்கு, AKSHARDHAM METRO STATION  என்ற மெட்ரோ நிலையத்தில் இருந்து 300 மீட்டர் நடந்தால் போதும்....    (Photo credits: IANS)

(Photo credits: ANI)

(Photo credits: ANI)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link