SSC டெல்லி போலீஸ் தலைமை கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு: சம்பளம் 81100 ரூபாய்
SSC டெல்லி போலீஸ் தலைமை காவலர் ஆட்சேர்ப்பு 2022: டெல்லி காவல்துறையில் தலைமை காவலர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை மே 17 அன்று பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டது. ஆட்சேர்ப்பு செயல்முறை முற்றிலும் ஆன்லைனில் இருக்கும்.
SSC டெல்லி போலீஸ் தலைமை கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு 2022: தேர்வு நடைமுறை கீழ்காணும் தேர்வுகளின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும்:
கணினி அடிப்படையிலான அறிவுத்திறன்கை சோதனை. உடல் தகுதி, மருத்துவ பரிசோதனை
SSC டெல்லி போலீஸ் தலைமை கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு 2022: முக்கியமான தேதிகள்
SSC டெல்லி போலீஸ் தலைமை காவலர் பணிக்கு 2022 மே 17ம் தேதியன்று தொடங்கிய விண்ணப்பங்களைப் பெறும் நடைமுறை, ஜூன் 16ம் தேதியுடன் முடிவடையும். டெல்லி போலீஸ் ஹெட் கான்ஸ்டபிள் தேர்வு செப்டம்பர் 2022இல் நடைபெறும்.
SSC டெல்லி போலீஸ் தலைமை கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு 2022: தகுதி
SSC டெல்லி போலீஸ் தலைமை கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு 2022: இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். கல்வித் தகுதி: 12வது தேர்ச்சி பெற்றவர்கள் டெல்லி போலீஸ் தலைமைக் காவலர் தேர்வு 2022க்கு விண்ணப்பிக்கலாம்.
SSC டெல்லி போலீஸ் தலைமை கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு 2022: எப்படி விண்ணப்பிப்பது?
SSC வழங்கிய சமீபத்திய புதுப்பிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் SSC இணையதளம்-ssc.nic.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆட்சேர்ப்பு செயல்முறை முற்றிலும் ஆன்லைனில் இருக்கும்.
SSC டெல்லி போலீஸ் தலைமை கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு 2022: சம்பளம்
SSC டெல்லி போலீஸ் தலைமை கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு 2022: சம்பளம்
டெல்லி காவல்துறை தலைமைக் காவலர் பணிக்கான சம்பளம் ரூ. 25,500 முதல் ரூ. 81,100 வரையில் இருக்கும்