மூலிகைகளின் ராணியாக மகுடம் சூடும் துளசிக்கு மவுசு அதிகமாம்!!!
மாடங்களில் வளர்க்கப்படும் துளசி, மாடத் துளசி... இது துழாயா? இல்லை துளவமா?
பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைச் செடியாக விஞ்ஞானிகள் கருதும் துளசியை, நற்குணங்கள் கொண்ட பெண்ணாக பாவித்து, அருமருந்தான நெல்லி மரத்தின் ஒரு பகுதியை மணமகனாக பாவித்து துளசித் திருமணம் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் துவாதசியன்று இந்தியாவில் நடத்தப்படுகிறது. துளசியும், நெல்லியும் சேர்ந்தால் என்ன கெமிஸ்ட்ரி என்பதை விஞ்ஞானிகள் கூறட்டும். ஆண்டாண்டு காலமாய் துளசிக்கும் நெல்லிக்கும் திருமணம் செய்து வைத்து மகிழ்வது நிம்மதியையும் வாழ்வில் வளத்தையும் கொடுப்பதாக நம்பும் இந்துக்கள் இந்த சடங்கை இடைவிடாமல் ஆண்டுதோறும் நடத்துகின்றனர்
வீடுகளில் தொட்டிகளில் வளர்க்கும் துளசி
மணத்திற்கு என்று ஒரு குணம் உண்டு. நல்மனதை வழங்கும் நற்குணம் கொண்டது துளசிச் செடி
மருத்துவ குணம் கொண்ட துளசியை காயவைத்து பொடியாக்கி பல நாட்கள் வைத்து பயன்படுத்தலாம். பல்வேறு மருந்துகள் தயாரிக்கவும் துளசி பயன்படுத்தப்படுகிறது
துளசியை, காட்ல பாத்திருக்கலாம், வீட்ல பாத்திருக்கலாம், மாடத்தில பாத்திருக்கலாம்... இப்படி கோலத்தில பாத்திருக்கீங்களா?
வட இந்தியாவில் உள்ள மதுரா, வடமதுரை என்றும் அழைக்கப்படுகிறது. கண்ணன் சிறுவயதில் விளையாடிய துளசி வனம், பிருந்தாவனம்...
பெரும்பாலான இந்துக்கள் பக்தி நோக்கில் துளசியை வீட்டு மாடங்களில் வளர்த்தால், பலர் அதை மருத்துவ குணங்களுக்காக வளர்க்கின்றனர்