Closing IFSC Code: அரசுக்கு சொந்தமான 2 வங்கிகளில் உங்கள் கணக்கு இருந்தால், உடனே இதை செய்யுங்கள்

Fri, 05 Feb 2021-7:48 pm,

தனது கட்டுபாட்டின் கீழ் வந்துள்ள தேனா வங்கி மற்றும் விஜயா வங்கியின் IFSC குறியீட்டை பிப்ரவரி 28-க்கு பிறகு மாற்றுகிறது. அத்தகைய சூழ்நிலையில், அதன் வாடிக்கையாளர்கள் மார்ச் 1 முதல் புதிய ஐ.எஃப்.எஸ்.சி (IFSC) குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும். இந்த இரண்டு வங்கிகளில், நீங்கள் வங்கி கணக்கு வைத்திருந்தால் புதிய ஐ.எஃப்.எஸ்.சி குறியீட்டை பெற்றுக்கொள்ளுங்கள். இல்லையெனில் நீங்கள் ஆன்லைனில் (Online Money Transfer) எந்த பரிவர்த்தனையும் செய்ய முடியாது.

பாங்க் ஆப் பரோடாவுடன் சேர்ந்து, பஞ்சாப் நேஷனல் வங்கியும் (Punjab National Bank) ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியாவின் ஐஎஃப்எஸ்சி / எம்ஐசிஆர் (IFSC-IMCR) குறியீட்டிலும் மாற்றங்களைச் செய்து வருகிறது. இருப்பினும் பழைய குறியீடுகள் மார்ச் 31 வரை செயல்படும். அதன்பிறகு புதிய குறியீட்டை பயன்படுத்த வேண்டும் பி.என்.பி. வங்கி தெரிவித்துள்ளது.

உங்கள் வங்கியின் IFSC குறியீட்டை மாற்றிய பிறகு, வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைனில் பணத்தை அனுப்ப முடியாது. ஈ-விஜயா மற்றும் இ-தேனா ஐஎஃப்எஸ்சி குறியீடுகள் மார்ச் 1, 2021 முதல் நிறுத்தப்படப் போவதாக பாங்க் ஆப் பரோடா தனது வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது. IFSC குறியீடு பெறுவது மிகவும் சுலபம். IFSC குறியீடு எப்படி பெற்றுக்கொள்ளலாம் என்றும் வங்கிகள் அறிவித்துள்ளன.

வாடிக்கையாளர்கள் வங்கி வலைத்தளத்திற்கு சென்றோ அல்லது வங்கி கஸ்டமர் சேவை எண் 18002581700 தொடர்புக்கொண்டு புதிய IFSC குறியீடு அறிந்துக்கொள்ளலாம். உங்கள் வங்கிக் கிளைக்கு நேரடியாக சென்று பெற்றுக்கொள்ளலாம். மேலும் எஸ்எம்எஸ் வசதியைப் பயன்படுத்தியும் பெறலாம். நீங்கள் பதிவுசெய்த மொபைல் எண்ணிலிருந்து 8422009988 க்கு "MIGR <SPACE> பழைய கணக்கு எண்ணின் கடைசி 4 இலக்கங்கள்" பதிவு செய்து, எண்ணுக்கு அனுப்பி IFSC குறியீட்டைப் பெறுங்கள்.

ஐ.எஃப்.எஸ்.சி குறியீடு 11 இலக்க குறியீடாகும், முதல் நான்கு இலக்கங்கள் வங்கியின் பெயரைக் குறிக்கும், அடுத்த 7 இலக்கங்கள் கிளைக் குறியீட்டைக் குறிக்கும். ஆன்லைனில் பணத்தை அனுப்பவோ அல்லது பெற்றுக்கொள்ளவோ IFSC குறியீடு பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link