Devara day 1 Collection: தேவாரா படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Sat, 28 Sep 2024-2:30 pm,

அதிக எதிர்பார்ப்பில் இருந்த டோலிவுட் ஸ்டார் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான தேவாரா படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. 

 

தேவாரா படத்தில் என்டிஆர் தவிர சைஃப் அலி கான், ஜான்வி கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தரின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

 

ரிலீஸ்க்கு முன்பே வசூலில் பல்வேறு சாதனைகளை இப்படம் நிகழ்த்தி இருந்தது. இந்நிலையில் படம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 

கொரட்டாலா சிவா இயக்கிய தேவாரா படம் உலகளவில் ரூ 172 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

 

உலகெங்கும் உள்ள ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்தி உள்ளனர். இப்படம்  முதல் நாளில் வட அமெரிக்காவில் மட்டும் $3.40 மில்லியன் வசூல் செய்துள்ளது.

 

ஆந்திரா, நிஜாம் மற்றும் செடெட் பகுதிகளில் முதல் நாளில் 54.21 கோடி வசூலை பெற்றுள்ளது. RRR க்கு அடுத்தபடியாக அதிக வசூலை இப்படம் பெற்றுள்ளது. இந்தியில் ரூ 7.50 கோடி வசூல் செய்துள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link