தனுசு ராசியை எதிர்த்தால் அழிவுதான்.. கட்டாயம் பிடிவாத குணமுடன் இருப்பார்களாம்
நம்பிக்கையும், வீரச் செயல்களைச் செய்யும் குணம் கொண்டவர்கள் தான் தனுசு ராசிகாரர்கள். இந்த ராசிக்காரர்களிடன் எண்ணற்ற ஆற்றலும், ஆர்வமும் நிறைந்திருக்கும். தனுசு ராசியினருக்கு பயணம் செய்வதும் மிகவும் பிடிக்கும். மேலும் அந்த இடங்களைப் பற்றி ஆராய்வதும் இவர்களுக்கு பிடிக்கும்.
தனுசு ராசிகாரர்கள் நேர்மையான இருப்பதே விரும்புவார்கள். தன்னிச்சையான குணத்தாலும் மற்றும் குழந்தைத் தனமான செயலாலும் காணப்படுவார்கள்.
தனுசு ராசி நெருப்பு ராசியாகும். எனவே இந்த ராசியில் பிறந்தவர்கள் அதிகமாக கோபப்படுவார்கள். அதனுடன் இந்த ராசிக்காரர்கள் தைரியமாகவும் தலைமைப் பொறுப்புடன் இருப்பார்கள். தலைமை தாங்குபவர்களாகவும், தைரியசாலிகளாகவும், தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.
தனுசு ராசிக்காரர்களுக்கு சிறப்பு ஆற்றல் என்ன வென்றால், இந்த ராசிக்காரர்கள் எதிர் காலத்தில் நடக்க கூடிய விஷயங்களை முன்கூட்டியே அறியும் ஆற்றல் கொண்டவர்கள் ஆவார்கள். அதீத புத்திசாலிகளாக இருப்பார்கள். இவர்கள் எல்லோரிடமும் அன்பாக பழகுவார்கள், ஆனால் யாருக்கும் அடிமையாக மாட்டார்கள்.
தனுசு ராசிக்காரர்களுக்கு தற்பெருமை அதிகமாகவே இருக்கும், இவர்கள் தன்னை தானே உயர்த்தி பேசிக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் அதிக நண்பர்களையும் கொண்டிருப்பார்கள். எப்போதும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்கள்.
தனுசு ராசியினர் உயர்கல்வி கற்றலில் மிகுந்த ஆர்வம் மிக்கவர்கள். எதையும் கற்பதில் தயக்கம் காட்டமாட்டார்கள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கற்றுக்கொள்ள புதிய மற்றும் அற்புதமான விஷயங்களைக் கண்டுபிடிக்க முயல்வார்கள்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.