தனுஷின் கேப்டன் மில்லர் படத்திற்கு இப்படி ஒரு விருதா? மகிழ்ச்சியில் படக்குழு!

Thu, 04 Jul 2024-5:19 pm,

10வது லண்டன் நேஷனல் ஃபில்ம் அகாடெமி திரைப்பட விருதுகளில், சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், தனுஷ் நடிப்பில் உருவான “கேப்டன் மில்லர்” திரைப்படம், ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்’ என்ற பிரிவின் கீழ் விருது பெற்றுள்ளது.

இந்த விருது வழங்கும் விழாவில், “கேப்டன் மில்லர்” படம் உலகின் பல  சிறந்த வெளிநாட்டுப் படங்களுடன் இணைந்து பரிந்துரைக்கப்பட்டது, எனினும் அனைத்துப் படங்களையும் தாண்டி வென்றுள்ளது.

லண்டனில் உள்ள போர்செஸ்டர் ஹாலில் நடந்த மதிப்புமிக்க 10வது லண்டன் நேஷனல் ஃபில்ம் அகாடெமி திரைப்பட விருதுகளின் போது விருது பெற்றுள்ளது. இந்த செய்தி ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வரலாற்றுப் பின்னணியில் படம் உருவாகி இருந்தது.

கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ், பிரியங்கா மோகன் முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உட்படப் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில்  இணைந்து நடித்திருந்தனர்.

 

திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம், ஓடிடியில் வெளியாகி 14 நாடுகளில் டாப் 10 தரவரிசையில் இடம் பிடித்தது. மேலும் இது இந்தியா உட்பட 9 நாடுகளில் டாப் 10 படங்களில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்தது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link