தனுஷ்க்கு சாதகமாக செயல்பட்ட நீதிமன்றம்! கலக்கத்தில் நயன்தாரா!
![நயன்தாரா](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2025/01/28/471899-nayanthara-3.jpg?im=FitAndFill=(500,286))
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண வீடியோ நெட்பிலிக்ஸ் தளத்தில் சமீபத்தில் வெளியானது. இதனை தொடர்ந்து பல சர்ச்சைகளும் வெடித்தது.
![நயன்தாரா](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2025/01/28/471898-nayanthara-1.png?im=FitAndFill=(500,286))
‘Nayanthara: Beyond the Fairytale’ ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடி தான்’ படத்தின் காட்சிகளை தங்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தி உள்ளதாக தனுஷ் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
![நயன்தாரா](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2025/01/28/471897-nayanthara-2.jpg?im=FitAndFill=(500,286))
மேலும் இதற்காக நயன்தாரா, நெட்பிலிக்ஸ் நிறுவனம் ரூ. 10 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார் தனுஷ். இதனால் கோபமடைந்த நயன்தாரா, தனுஷை கடுமையாக விமர்சித்து இருந்தார்.
இந்நிலையில் நெட்பிலிக்ஸ் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில், தங்களுக்கு எதிராக தனுஷ் தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்து இருந்தது.
இதனை ஏற்க முடியாது என்று ஐகோர்ட் மறுத்து அந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. மேலும் இந்த வழக்கை பிப்ரவரி 5ம் தேதி பட்டியலிட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதனால் நயன்தாரா தரப்பு மிகவும் வருத்தத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தீர்ப்பு தனுஷ்க்கு சாதகமாக வந்தால் ரூ. 10 கோடி நஷ்டஈடு தர வேண்டி இருக்கும்.