தனுஷ் to செல்வராகவன்-ராயன் படத்தில் நடிப்பவர்கள் யார் யார்? லிஸ்ட் இதோ!
)
தனுஷ் நடித்து, இயக்கி வரும் படம் ராயன். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து மலையாள நடிகர் காளிதாஸ் ஜெயராம் மற்றும் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷனும் நடித்திருக்கின்றனர்.
)
அபர்ணா பாலமுரளி, ராயன் படக்குழுவினருடன் இணைந்திருக்கிறார். இவர் சூரரைப் போற்று படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மலையாளத்திலும் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
)
வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜ், ராயன் படத்தில் இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே தனுஷ் உடன் பல படங்களில் சேர்ந்து நடித்துள்ளார். திருச்சிற்றம்பலம் படத்திலும் தனுஷிற்கு தந்தையாக நடித்தார்.
பருத்திவீரன் சரவணன், ராயன் படத்தில் இணைந்திருக்கிறார். இவர், தற்போது கிராமிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இயக்குநரும் நடிகருமான செல்வராகவன், ராயன் படத்தில் இணைந்துள்ளார். தனுஷ், இவர் இயக்கிய சில படங்களில் தனுஷ் ஏற்கனவே நடித்திருக்கிறார்.
எஸ்.ஜே.சூர்யா சமீபத்தில் சில ஆண்டுகளாக வில்லனாக நடித்து வருகிறார். இவர், ராயன் படத்திலும் இணைந்துள்ளார்.
சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மி, ராயன் படத்தில் இணைந்திருக்கிறார். காதல்-கமர்ஷியல் கதைகளை தேர்ந்தெடுப்பதை தாண்டி, க்ரைம்-வில்லத்தனமான கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் ராயன் படத்திலும் அவர் நடித்து வருகிறார்.