நீரிழிவு நோயாளியா நீங்கள்: இவற்றை கண்டிப்பாக உணவில் சேருங்கள்
நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். அதிக நார்ச்சத்து நிறைந்த உணவு உங்கள் இரத்தத்தில் இரத்த சர்க்கரையை பராமரிக்கிறது. உணவில் நார்சத்தை அதிகரித்து சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க நீரிழிவு நோயாளிகள் உட்கொள்ள வேண்டிய சில வகை உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வெந்தயத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. மேலும் இதில் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவும் கலவைகள் உள்ளன. வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது நன்மை பயக்கும். கூடுதல் நார்ச்சத்தை அதிகரிக்க வெந்தய இலைகளை கறிகள், பொரியல் அல்லது பராத்தா போன்றவற்றிலும் பயன்படுத்தலாம்.
கீரை மற்றும் பச்சை காய்கறிகளில் நார்ச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன. ஆகையால் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. ஆரோக்கியமான நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள உங்கள் உணவில் கீரையை கறிகள், சாலடுகள் ஆகியவற்றில் சேர்க்கலாம்.
சியா விதைகள் நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளின் சிறிய ஆற்றல் மையங்கள். தண்ணீரில் ஊறவைக்கும்போது, அவை ஜெல் போன்ற பொருளை உருவாக்குகின்றன. இது செரிமானத்தை மெதுவாக்குகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. தயிர் மற்றும் ஸ்மூத்திகளில் சியா விதைகளைச் சேர்க்கலாம்.
கொய்யாவில் நார்ச்சத்து, குறிப்பாக கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது மற்றும் இரத்த சர்க்கரை அதிகரிப்பதைத் தடுக்க உதவுகிறது. இந்த நிலையில், கொய்யாவை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம், அல்லது சாலட், ஸ்மூத்தி அல்லது ஃப்ரூட் சாட்டில் சேர்க்கலாம்.
ப்ரோக்கோலியில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இது குறைந்த கிளைசெமிக் அளவு கொண்டது மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஒரு சுவையான மற்றும் நார்ச்சத்து நிறைந்த சைட் டிஷ்க்காக ப்ரோக்கோலியை பயன்படுத்தலாம். சூப்களிலும் இதை சேர்க்கலாம்.
பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.