சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் டயட்டில் சேர்க்க வேண்டிய ‘சில’ காய்கறிகள்!
நீரிழிவு நோயாளிகள் சரியான உணவுமுறை மூலம் ரத்த சர்க்கரையின் அளவை எளிதில் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அதோடு மருந்தின் அளவையும் போகப் போக குறைத்து விடலாம். அதற்காக, தினசரி உணவில், சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகளை அறிந்து கொள்ளலாம்.
ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பதில் பாகற்காய்க்கு நிகர் வேறெதுவும் இல்லை. பாகற்காய் ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சிறந்த முறையில் கட்டுப்படுத்தப்படும்.
கிளைசிமிக் குறியீடு குறைவாக உள்ள சுரைக்காயின் சாறு எடுத்து அதை தொடர்ந்து காலையில் குடித்து வர இன்சுலின் அளவு அதிகரித்து, நீரிழிவு நோய் விரைவில் கட்டுக்குள் வரும்.
வெந்தயக் கீரை நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்து. இந்தக் கீரையில் உள்ள லேசான கசப்பு சுவை, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவை குணமாக்க உதவுகிறது.
நீர் சத்து நிறைந்த பூசணிக்காய் இனிப்பு சுவையுடையது என்றாலும் அவற்றில் கிளைசீமிக் குறியீடு மிகவும் குறைவாக உள்ளது. எனவே இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற காய்கறி.
இரவில் தூங்கும் போது வெண்டைக்காயை இரண்டாகக் கீறி, அதனை ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்ததும், அதை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சர்க்கரை அளவை சிறப்பாக கட்டுப்படுத்த முடியும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.