சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பச்சை இலைகள்! இவை பச்சிலைகள் அல்ல
அஸ்வகந்தா இலைகளின் உதவியுடன் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தலாம். இந்த இலைகளை வெயிலில் உலர்த்தி பின்னர் அவற்றை அரைத்து தூள் வடிவில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். அந்த பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்
கறிவேப்பிலை தென்னிந்திய உணவுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இந்த பச்சை இலைகள் நீரிழிவு நோயாளிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதிக நார்ச்சத்து கொண்ட கறிவேப்பிலை, இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. தினமும் காலையில் சில கறிவேப்பிலைகளை மென்று சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும்
வெந்தயக்க்கீரையின் இலைகளில் ஆயுர்வேத பண்புகள் நிறைந்துள்ளன, அவற்றின் நுகர்வு ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. சர்க்கரையின் அளவைக் குறைக்க பெரிதும் உதவும் வெந்தயத்தின் இலைகளும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.
மாம்பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு எதிரி என்று கூறப்படுகிறது, ஏனெனில் இது அதிக இயற்கை சர்க்கரை உள்ளடக்கம் உள்ளது, ஆனால் ஆச்சரியப்படும் விதமாக, மாமரத்தின் இலைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும், மாவிலையில், நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் பெக்டின் ஏராளமாக உள்ளன. இரத்தத்தில் சர்க்கரை அளவு மட்டுமல்ல, கொலஸ்ட்ராலையும் குறைக்கலாம். மாவிலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து பத்திரப்படுத்தவும். இரவு முழுவதும் அப்படியே வைத்துவிட்டு காலையில் வடிகட்டி குடிக்கவும்.
சர்க்கரை நோயாளிகள்,நார்ச்சத்துக் கொண்ட பச்சை இலைகளை அப்படியே மென்று உண்பதை வழக்கமாக வைத்துக் கொள்ளவ் ஏண்டும். இது கணையத்தில் அதிக இன்சுலினை உருவாக்கும் செயல்பாட்டை அதிகரிக்கிறது
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)